கனடாவைச் சேர்ந்த மைக்கேல் அர்செனால்ட் (வயது 56), 1980 முதல் 1990 வரையிலான காலக்கட்டத்தில் கனடா ஜிம்னாஸ்டிக் அணியின் பயிற்சியாளராக இருந்தவர். அப்போது ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் அணிக்கு பயிற்சி அளித்த வந்தார்.அப்போது இளம் வீராங்கனைகளுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததாகவும், வீராங்கனைகளை தாக்கியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

இதனால் பார்சிலோனாவில் 1992-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இந்நிலையில் எட்மோன்டனில் உள்ள அவரது வீட்டில் வைத்து அர்செனால்ட் கைது செய்யப்பட்டார். அவர் வருகிற 24-ந்தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார். அவர் மீது செக்ஸ் டார்ச்சர் (குற்றத்திற்கான அளவு 3 கவுன்ட்) மற்றும் தாக்குதல் (குற்றத்திற்கான அளவு 4 கவுன்ட்) நடத்திய இரு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

(Visited 9 times, 1 visits today)