டிஜிட்டல் வங்கிச் சேவைகளை ஊக்குவிப்பதற்கான நான்கு வார கால பிரசாரத்தை கொமர்ஷல் வங்கி தொடங்கியுள்ளது. தனது இணைய வங்கி,நடமாடும் வங்கி, நடமாடும் வங்கிப் பிரயோக மென் பொருள் பாவனை ,ஈ பாஸ்புக் ,தன்னியக்க வங்கித் தளங்கள் என்பனவற்றை ஊக்குவிக்கும் வகையில் இந்தப்பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்தச் சேவைகளில் இணைந்து கொள்வதால் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் செலவு ரீதியான நன்மைகளை அனுபவ பூர்வமாக உணரச் செய்யும் வகையில் இது அமையவுள்ளது.

வங்கிக் கிளைகளில் இதற்கென பிரசார அலகுகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு விண்ணப்பப் படிவங்களை நிரப்புவதற்கு பதிலாக விஷேடமாக கணினி பிரயோக முறையைக் கையாண்டு சேவைகள் வழங்கப்படும்.

மே மாதம் எட்டாம் திகதி முதல் ஜீன் மாதம் இரண்டாம் திகதி வரை இந்த ஊக்குவிப்பு காலம் அமுலில் இருக்கும். இந்தக் காலப்பகுதியில் டிஜிட்டல் சேவையில் தம்மைப் பதிவு செய்து கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு இணைவுக் கட்டணம் அறவிடப்படமாட்டாது.

அதே போல் இணைய வழி வங்கிச் சேவைக்கான முதலாம் வருட கட்டணம் ,மொபைல் வங்கிச் சேவையில் இணைவதற்கான கட்டணம் என்பனவும் இரத்துச் செய்யப்படும் என வங்கி அறிவித்துள்ளது.

கொமர்ஷல் வங்கியின் டிஜிட்டல் வங்கி அலைவரிசைகள் இணைய வங்கிச் சேவைகள் ,மொபைல் வங்கிச் சேவைகள் USSD வங்கிச் சேவை SMS  , மொபைல்(WAP) மொபைல் வங்கிச் சேவை பிரயோகம் ,வங்கியின் ஈ பாஸ்புக் என்பனவற்றை உள்ளடக்கியது.

கடந்த ஆண்டில் வங்கியின் டிஜிட்டல் தளங்கள் ஊடாக 662.95 பில்லியன்கள் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். வங்கியின் இணைய வழி சேவைகள் ஆரம்பிக்க்ப்பட்ட பின்னர் ஒரு குறிப்பிட்ட ஆண்டில் வங்கி டிஜிட்டல் வழியாகக் கையாண்டு மிகப் பெரிய தொகை இதுவாகும்.

இந்த வசதிகளைப் பாவிப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. டிஜிட்டல் பரிமாற்றங்களின் பெறுமதி 31.31 வீதத்தால் அதிகரித்துள்ளது. டிஜிட்டல் பணப்பரிமாற்றம் செயற்பாடுகள் கடந்த ஆண்டுக்கு முந்திய ஆண்டோடு ஒப்பிடுகையில் 2017 இல் 16.45 வீத அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

(Visited 93 times, 1 visits today)