சியபத பினான்ஸ் பிஎல்சி நிறுவனம், ‘சியபத பொனான்ஸா’ விருது வழங்கும் விழாவை, அண்மையில் வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

இந்த நிகழ்வில் சியபத பினான்ஸ் பிஎல்சி யின் பிரதம செயற்பாட்டு அதிகாரி ரஜீவ் டி சில்வா உட்பட நிறுவனத்தின் பல்வேறு முக்கிய அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இதன்போது, 21 வெற்றியாளர்கள் சியபத பினான்ஸ் பிஎல்சி யினால் தெரிவிக்கப்பட்டவாறு பரிசுகளைப் பெற்றுக் கொண்டார்கள்.

சியபத பொனன்ஸா என்பது, சியபத லீசிங் மற்றும் தங்க நகை அடகுச் சேவைகளை மேற்கொள்ளும் வாடிக்கையாளர்களுக்காக முன்னெடுக்கப்பட்டு வரும் ஒரு போட்டியாகும். நிறுவனத்தின் நாட்காட்டியில் இது மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகின்றது. குறித்த ஊக்குவிப்புக் காலப்பகுதியில் லீசிங் மற்றும் பொற்கடன் வசதிகளைப் பெற்ற வாடிக்கையாளர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு இந்தப் பரிசுகள் வழங்கப்பட்டன.

லீசிங் பிரிவில் முதல் பரிசு வெற்றியாளரான எம்.பி.எஸ்.மாரசிங்கவுக்கு புத்தம் புதிய ரெனோல்ட் கிவிட் வாகனம் பரிசாக வழங்கப்பட்டது. தங்க நகை பிரிவில் ஒவ்வொரு சியபத பினான்ஸ் கிளையிலும் வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

இந்த வெற்றியாளர்களுக்கு பெறுமதிமிக்க தங்க நாணயங்கள் பரிசாக வழங்கப்பட்டன. ஐ.எம்.ரிபாஸி அம்பாறை, எம்.அஸ்வர் அனுராதபுரம், ஏ.ஐ.ஷாலிகா அவிசாவளை, வை.ஐ.ஹலீமா மட்டக்களப்பு, எம்.டி.மதாற கம்பஹா, ஏ.ஹமீது கல்முனை. நிமால் சில்வா களுத்துறை, கந்தையா யுரேக்கா கண்டி, ராஜா சஷிகலா கேகாலை, ஜெசிந்தா மாலனி குளியாப்பிட்டி, ஜீ.ஜீ.சந்தன குருநாகல் மெட்ரோ, அமல் இந்திக மாத்தறை, கே.எம்.எஸ்.பிரியங்கனி நீர்கொழும்பு, எஸ்.முரளீதரன் நுகேகொடை, ஜயந்த செனவிரத்ன நுவரெலியா, ஏ.பாண்டிராஜா இரத்தினபுரி, எஸ்.ஹலஸிமணி சாய்ந்தமருது, எம்.எஸ்.விதான திருகோணமலை, எஸ்.திவாகரன் வவுனியா மற்றும் எம்.முனியாண்டி வெள்ளவத்தை ஆகியோர் தங்க நாணயங்களைப் பரிசாகப் பெற்றுக்கொண்டனர்.

இந்த விடயம் பற்றிக் கருத்து வெளியிட்ட சியபத பினான்ஸ் பிஎல்சியின் முகாமைத்துவப் பணிப்பாளர் சமன் ஹேரத்,

‘வாடிக்கையாளர்களுக்கு அதிகூடிய தரத்திலான சேவைகளையும், பெறுமதியையும் பெற்றுக் கொடுப்பதே சியபத பினான்ஸின் பிரதான நோக்கமாகும்.

சியபத பினான்ஸின் வெற்றிக்கு எமது வாடிக்கையாளர்களே காரணமாக அமைந்துள்ளனர். எனவே, வருடாந்த சியபத பொனான்ஸா எமக்கு மகிழ்ச்சியைப் பெற்றுத் தருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் எமது வர்த்தக வளர்ச்சி மேலும் துரிதமாகும் என்று நான் நம்புகின்றேன்’ என்று தெரிவித்தார்.

(Visited 47 times, 1 visits today)