இலங்கையில் முதல் முறையாக டிஜிட்டல் LED திரைகளின் மூலம் விளம்பரப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடிய அதிநவீன தொழில்நுட்பத்திலான காட்சிப்படுத்தல் திரைகளை (display wall) நேற்று முன்தினம் சினமன் கிராண்ட் ஹோட்டலில் மிகவும் கோலாகலமாக ஃஎ நிறுவனம் அறிமுகம் செய்து வைத்தது.

பல்வேறு துறைசார் விருந்தினர்களின் பங்கேற்பில் இடம்பெற்ற LG கிராண்ட் டெக் மாநாட்டில் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட உள்நாட்டு வணிக சமூக பிரதிநிதிகள் மற்றும் விருந்தோம்பல், வணிகம், போக்குவரத்து, ஊடகம் போன்ற துறைகளைச் சார்ந்த 250 இற்கும் மேலான சிறப்பு விருந்தினர்கள் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

LG நிறுவனத்தினால் அறிமுகம் செய்து வைத்த வெவ்வேறு வகையான டிஜிட்டல் LED திரைகள் நேரடியாக காட்சிப்படுத்தப்பட்டு காணொளிகள் ஒளிபரப்பப்பட்டு இக்காட்சித் திரைகள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டன.

இலெக்ட்ரோனிக் டிஸ்பிளே தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய டிஜிட்டல் LED காட்சித் திரைகள் கடந்த ஒருசில வருடங்களாக மிகவும் பிரபல்யமடைந்துள்ளன. இந்த டிஜிட்டல் மின்னணு காட்சித் திரைகளின் மூலம் விற்பனை விரிவாக்கல் மற்றும் குறியீட்டு விழிப்புணர்வுகள், விளம்பரப் பிரசுரங்கள், நிறுவன தகவல் பரிமாற்றங்கள், உற்பத்தி மற்றும் சேவை தொடர்பான தகவல் தொடர்பாடல் பரிமாற்றங்களை மிகவும் துல்லியமாக உயர் தரத்திலான கிரஃபிக்ஸ் மற்றும் காணொளிகளை திரையிட்டு காட்சிப்படுத்த முடியும்.

இந்த அதிநவீனLG உற்பத்திகள் மூலம் உள்நாட்டு விளம்பரத் துறையில் புதியதொரு புரட்சயை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கின்றது. உள்நாட்டு வணிக சமூகம் தனது வாடிக்கையாளர்களுக்கு தமது உற்பத்திகள் தொடர்பான விழிப்புணர்வை கொண்டு சேர்ப்பதற்கான மிகச்சிறந்த வழிமுறையாக இது அமையும்.

LG கிராண்ட் டெக் மாநாட்டின் போது அறிமுகம் செய்து வைக்கப்பட்ட OLED டிஸ்பிளே காட்சித்திரையே மிகச்சிறந்த உற்பத்தியாகும். எளிமையான மற்றும் மெல்லியதான இது இருண்ட கறுப்பு மற்றும் பிரகாசமான வெள்ளை நிறத்திலான நேரடி வர்ணங்களை இது வெளிப்படுத்துகிறது.

LG 55’’ LED திரையில் ஊடாடக்கூடிய பிரம்மாண்ட காணொளிகளை திரையிட்டு காட்சிப்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளதோடு, இதிலுள்ள குறுகிய bezel மிகவும் இலகுவான வீடியோ சுவராக செயற்பட்டு தனிப் படங்களை மிகவும் துல்லிமாக பெற்றுத்தருகிறது. மேலும், வாடிக்கையாளர்களின் வியாபாரத் தேவைகளுக்கு ஏற்றவாறு சரிசெய்திடக்கூடிய இந்த LED காட்சித் திரையானது வாடிக்கையாளர்களை நேரடியாக கவரும் வல்லமை கொண்டதாகும்.

LG டிஜிட்டல் LED திரைகள் உலகளாவிய ரீதியிலான விருந்தோம்பல் மற்றும் உபசரிப்பு துறைகளில் அதிகமாக வரவேற்கத்தக்க ஒன்றாகும். மேலும் நட்சத்திர ஹோட்டல்களுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு இது புதுவித அனுபவத்தை பெற்றுத்தருகிறது. இதன்மூலம் ஹோட்டல்களுக்கு விசேட அனுகூலங்கள் கிடைப்பதோடு Digital Navigation, Room Service, Menu Board மற்றும் தேவையான விளம்பரங்களை திரையிட முடியும்.

இதன்மூலம் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்தல் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு தேவையான தகவல்களை வழங்கவும் முடியும். அதேபோல் விற்பனை விரிவாக்கல் நிகழ்ச்சித் திட்டங்கள் போன்ற நிறுவன வியாபார தேவைகளுக்கு இவற்றை பயன்படுத்த முடியும். மேலும், வாடிக்கையாளர்களுக்கு இடையிலான தொடர்பாடல் நடவடிக்கைகளை மேம்படுத்தி விற்பனை நாமத்தின் தனிப்பட்ட அடையாளத்தை உயர்த்தவும் முடியும்.

LGஜிட்டல் LED காட்சித் திரைகள் அனைத்தும் கொள்ளுப்பிட்டி, அபான்ஸ் எலைட் காட்சியறையின் 2 ஆம் தளத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

(Visited 25 times, 1 visits today)