அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் கடந்த 2003-ம் ஆண்டு ராப் பாடகர் கார்சியா தனது காதலியை சந்திக்க சென்றுள்ளார். அப்போது நடைபெற்ற கொள்ளை முயற்சியில் கார்சியா கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார்இ இந்த சம்பவத்தில் கார்சியாவின் காதலிக்கும் தொடர்பு உள்ளதை கண்டறிந்துஇ அவரது காதலி உட்பட அனைவரையும் கைது செய்தனர். இந்த கொலை வழக்கில் கார்சியாவை சுட்டுக் கொன்ற முக்கிய குற்றவாளியான கேஸ்டில்லோ என்பவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட கேஸ்டில்லோவுக்குஇ விஷ ஊசி மூலம் நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இந்த வருடத்தில் டெக்சாஸ் மாநிலத்தில் நிறைவேற்றப்படும் 6-வது மரண தண்டனை இது என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 29 times, 1 visits today)