என் மண வாழ்க்கையில் வரவில்லையென்றால் நடிகை சௌந்தர்யாவைத்தான் செய்திருப்பேன் என்று இயக்குனர் . உருக்கத்துடன் கூறினார்.

பிரபல இயக்குனர் சுந்தர் சி. பிரபல நடிகை குஷ்புவை திருமணம் செய்து கொண்டார். இந்த நட்சத்திர ஜோடிகளுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

சமீபத்தில் சுந்தர்.சி ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவரிடம் சில நடிகைகளின் புகைப்படங்களை காட்டி இதில் உங்களுக்கு பிடித்தவர்கள் யார், யார் என்று கேட்டனர்.

அதற்கு சுந்தர் சி. நடிகை சௌந்தர்யா புகைப்படத்தைப் பார்த்து கொஞ்சம் எமோஷ்னல் ஆகி, ‘‘குஷ்பு என் வாழ்க்கையில் வரவில்லை என்றால் கண்டிப்பாக இந்த பெண்ணைத்தான் திருமணம் செய்திருப்பேன்’’ என்று கூறினார்.

அந்த அளவிற்கு சௌந்தர்யாவை எனக்குப் பிடிக்கும். சௌந்தர்யாவுடன் எப்போதும் அவருடைய அண்ணன் உடனிருப்பார். விமான விபத்தில் இறக்கும்போது கூட இருவரும் சேர்ந்து சென்றுவிட்டனர்’’ என்று உருக்கத்துடன் கூறினார்.

(Visited 257 times, 1 visits today)