வளர்ந்து வரும் இளம் இயக்குனர் அருண்ராஜா காமராஜுக்கு நடிகர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னேறி வரும் பிரபலங்களுக்கு எப்போதுமே மறக்காமல் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவிப்பது வழக்கம். அப்படி நிறைய இளம் கலைஞர்களின் திறமைகளைப் பார்த்து வியந்துபோய் அவர்களுக்கு நேரிடையாக போன் செய்து அவர்களை பாராட்டுவார்.

தற்போது பாடலாசிரியராக இருந்து வரும் , நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து ‘கனா’ என்ற படத்தை இயக்குவதன் மூலம் இயக்குனராக அறிமுகமாகவுள்ளார். அதற்காக நடிகர் விஜய் அவருக்கு போன் செய்து வாழ்த்து கூறியுள்ளார்.

தனக்கு வாழ்த்து தெரிவித்த விஜய்க்கு, அருண்ராஜா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், ‘‘நீங்கள் எப்போதும் மற்றவர்களை ஊக்கப்படுத்த மறந்ததே இல்லை. காலை எழுந்தவுடன் உங்களது வாழ்த்தை பார்க்கும் போது எனக்கு புத்துணர்வு கொடுத்துள்ளது’’ என்று பதிவு செய்துள்ளார்.

(Visited 28 times, 1 visits today)