மகத்தான ஜப்பான் தொழில்நுட்பத்திலான கண்கவர் தோற்றத்தைக் கொண்ட 30 ஆசனங்களுடன் கூடிய புத்தம் புதிய LUXURY NISSAN CIVILIAN பஸ்களை (பஸ்) ஜப்பான் நாட்டின் நிசான் மோட்டார் வாகன நிறுவனத்தின் இலங்கை ஏக முகவராக வரையறுக்கப்பட்ட அசோசியேடற் மோட்டர்வேஸ் தனியார் நிறுவனம் இலங்கை சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

மேற்படி NISSAN CIVILIAN பேரூந்தினை பயன்படுத்துகின்ற சாரதிகளும் நடத்துநர்களும் இப் பேரூந்தின் தரம், சொகுசு வசதிகள் மற்றும் பொருளாதார நன்மைகள் தொடர்பாக பெருமிதத்துடன் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேற்படி Brand New LUXURY NISSAN CIVILIAN பஸ்ஸிதினை  ரூ 74 இலட்சத்து 94 ஆயிரம் என்ற நியாய விலைக்கு இப்பொழுது கொள்வனவு செய்யலாம். இலகு தவணை திட்டங்கள் மற்றும் நிதி வசதிகள் வரையறுக்கப்பட்ட AMW கெப்பிட்டல் லீசிங் நிறுவனத்தின் மூலமாகவும் அல்லது இதர நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் மூலமாகவும் வழங்குவதற்கு AMW நிறுவனம் தயாராக உள்ளது.

இப் பஸ்ஸினை AMW குருணாகல் விற்பனை முகவரான ஜயசேகர மோட்டர்ஸ் காட்சியறையிலும் இல 185, யூனியன் பிளேஸ், கொழும்பு 2 என்ற முகவரியில் அமைந்துள்ள NISSAN காட்சியறையிலும் பார்வையிட முடிவதோடு பரிசோதனை ஓட்டத்துக்கும் வாகனங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன.

100% ஜப்பான் உற்பத்தியான NISSAN CIVILIAN பஸ் LUXURY என்ற சொல்லின் பொருளை நிஜப்படுத்தும் வகையில் ஹய் பேக் சீட் 30 ஆசனங்களைக் கொண்ட Auto Door, Line A/C, Window Curtains, ABS தொகுதி, UV Protected Windows , Fog Lights, power Steering, Bottle Cooler போன்ற வசதிகளை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இப் பஸ்ஸானது இவ் வகை பஸ்களில் எரிபொருளை சிக்கனமாகப் பாவிக்கும் பஸ்ஸாகவும் விளங்குகிறது.

இதன் சொகுசு வசதிகள் காரணமாக அதிவேக நெடுஞ்சாலையில் செலுத்துவதற்கும் பாடசாலை மாணவர்களை அழைத்துச் செல்வதற்கும் அலுவலக பயணிகள் போக்குவரத்துக்கும் மிகவும் பொருத்தமானதாக இருக்கும். இவ் வாகனங்களை கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஜப்பான் நாட்டின் NISSAN நிறுவனத்திடமிருந்து 10,000 கி.மீ அல்லது 3 ஆண்டு கால பூரண உத்தரவாதச் சான்றிதழ் வழங்கப்படுவதோடு நாடெங்கிலுமுள்ள AMW முகவர்களை தொடர்பு கொண்டு 24 மணித்தியாலங்களாக இயங்கும் அனர்த்த சேவையினை 15 முதல் 30 நிமிடங்களில் பெற்றுக்கொள்ளவும் முடியும்.

மேலும், அசல் NISSAN உதிரிப் பாகங்கள் முகவர்களிடமிருந்து எந்தவொரு உதிரிப் பாகத்தையும் சலுகை விலையில் கொள்வனவு செய்வதற்கும் AMW சேவைகள் வலையமைப்பின் சேவை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முடியும்.

(Visited 30 times, 1 visits today)