கொழும்பு கல்கிசை பகுதியில் ஒன்றரைக் கோடி, ரூபாவை மோசடி செய்த பெண்ணை பொலிஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சிராதாரா பதிக் என்ற பெயரில் ஆடை வர்த்தக நிலையம் ஒன்றை நடத்திய பெண்ணே இவ்வாறு மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

ஆடை வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு மோசடியான முறையில் காசோலைகள் வழங்கி ஒன்றரை கோடி ரூபாவுக்கும் அதிக பணத்தை மோசடி செய்துள்ளார்.

இந்த மோசடியில் ஈடுபட்ட சித்தாரா கீதானி களுஆராச்சி என்ற பெண்ணை கைது செய்வதற்கு பொலிஸார் பொது மக்களின் உதவியை கோரியுள்ளனர்.

இவர் கெஸ்பேவ பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடைய பெண் என தெரியவந்துள்ளது.தகவல் அறிந்தால் கல்கிசை குற்ற விசாரணை பிரிவின் 0112729621 என்ற இலக்கத்திற்கு அல்லது கல்கிசை பொலிஸ் தலைமையக பொலிஸ் விசாரணை பிரிவின் 071 8591664 என்ற இலக்கத்திற்கும் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

(Visited 36 times, 1 visits today)