தொழில்நுட்பக் கோளாறினால் ட்விட்டர் சமூக வலைத்தளம் இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளில் முடங்கியுள்ளது.

உலக அளவில் பேஸ்புக்கிற்கு அடுத்தபடியாக அதிகம் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளம் ட்விட்டர். இதனை சர்வதேசப் பிரபலங்கள் பலரும் அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

இந்நிலையில், இந்த இணையதளம் திடீரென முடங்கியுள்ளது. தொழில்நுட்பக் கோளாறுதான் இதற்குக் காரணம் என்று ட்விட்டரில் தோன்றும் அறிவிப்புச் செய்தி குறிப்பிடுகிறது.

இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா உட்பட பல நாடுகளில் ட்விட்டர் இணையதளம் முடங்கியுள்ளது. ஆனால், ட்விட்டர் வசதிகளை விரிவுபடுத்தும் ட்வீட்டெக் (https://tweetdeck.twitter.com/) இணையதளம் வழக்கம்போல செயல்படுகிறது.

(Visited 31 times, 1 visits today)