இன, மதங்களுக்கு இடையில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தை சகோதரத்துவத்தையும் மேம்படுத்தும் நோக்கில் வடக்கிலிருந்து தென் பகுதிக்கு சமூக பொலிஸ் நட்புறவு சுற்றுப் பயணம் ஒன்று எதிர்வரும் வியாழக்கிழமை வவுனியாவில் ஆரம்பமாகிறது.

சமூக பொலிஸ் பிரிவும் வவுனியா பிரதி பொலிஸ் மாஅதிபர் அலுவலகமும் இணைந்து இதனை ஏற்பாடு செய்துள்ளன.

அன்றையதினம் வவுனியாவிலிருந்து குருணாகல், கம்பஹா, காலி, மாத்தறை ஊடாக கதிர்காமம் வரை பயணித்து, 20 ஆம் திகதி கதிர்காம கந்தன் ஆலயத்தில் விசேட வழிபாட்டு நிகழ்ச்சி நடைபெறும். அதனைத் தொடர்ந்து மஹியங்கனை, கண்டி, தம்புள்ளை, அனுராதபுரம் ஊடாக மீண்டும் சுற்றுப்பயணம் வவுனியாவை சென்றடையும்

(Visited 9 times, 1 visits today)