வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எவ்வாறு செயற்படப் போகிறார் என்பதை வைத்தே அவருடன் இணைவது குறித்து ஈபிஆர்எல்எவ் தீர்மானிக்கும் என்று அக் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிய கட்சி ஒன்றின் மூலம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றான, பரந்துபட்ட அரசியல் கூட்டணி ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ள கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று இது தொடர்பாக சுரேஸ் பிரேமச்சந்திரனிடம் கருத்து கேட்டிருந்தது.

அதற்கு அவர், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைகள் தொடர்பாக அதிருப்தியடைந்துள்ளதால், ஒன்றுபட்ட அரசியல் கூட்டணி ஒன்றை அமைக்கும் விருப்பத்தை முதலமைச்சர் வெளிப்படுத்தியுள்ளார்.

எனினும், அவருடன் ஈபிஆர்எல்எவ் இணைந்து கொள்ளுமா என்பது, முதலமைச்சர் எவ்வாறு செயற்படப் போகிறார் என்பதிலேயே, தங்கியுள்ளது” என்று கூறியுள்ளார்.

(Visited 34 times, 1 visits today)