52 ஆவது ஆசிய ஆணழகன் போட்டியில் இலங்கையிலிருந்து 5 வீரர்களை பங்கு பெற செய்வதற்கு தேசிய ஆணழகர் சங்கம் தீர்மானித்துள்ளது.

30 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி இப்போட்டியில் ஆணழகர்கள் இதில் கலந்துகொள்ளவுள்ளனர். இவர்கள் எடை வகுப்புக்களின் அடிப்படையில் போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டி மங்கோலியாவில் எதிர்வரும் 26ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

கடந்த வருடம் நடைபெற்ற ஆசிய ஆணழகன் போட்டியில் இலங்கையின் சார்பில் எந்தவொரு வீரரும் கலந்துகொள்ளவில்லை. இதில் கலந்துகொள்ளவிருந்த வீரருக்கு எதிர்ப்பு தெரிவித்தமையே இதற்கு காரணமாகும்.

இந்த போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ள வீரர்களுக்கு இதுவரையில் அனுமதி வழங்கப்படவில்லை .

(Visited 23 times, 1 visits today)