ஆர்யா தனது வருங்கால மனைவியை தேர்வு செய்துவிட்டார். ஆர்யாவுக்கு பெண் பார்க்க கலர்ஸ் டிவியில் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்கள். 16 பெண்கள் ஆர்யாவை மணக்கும் ஆசையுடன் அந்த நிகழ்ச்சிக்கு வந்தனர். இந்த நிகழ்ச்சி நம் கலாச்சாரத்திற்கு எதிரானது என்று எதிர்ப்புக் குரல்கள் எழுந்தும் ஏற்பாட்டாளர்கள் அதை எல்லாம் கண்டுகொள்ளவில்லை.

தற்போது சூசனா, அகாதா, சீதாலட்சுமி என்று மூன்று பெண்கள் மட்டுமே இறுதிச் சுற்றுக்கு வந்துள்ளனர். எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே இன்று இரவு நடக்கிறது. அதாவது நிகழ்ச்சிக்கு இன்று சுபம் போடுகிறார்கள்.

3 பெண்களும் மணப்பெண் போன்று அலங்காரம் செய்து வரிசையாக நிற்க ஆர்யா ஒரு பெண் அருகில் சென்று அவரை கட்டிப்பிடிக்கும் விளம்பர வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

ப்ரொமோ வீடியோவில் ஆர்யா ஒரு பெண்ணை தேர்வு செய்தது போன்று காட்டியுள்ளனர். ஆனால் ப்ரொமோவில் காட்டுவது ஒன்றாகவும், நிகழ்ச்சியில் நடப்பது வேறொன்றாகவும் இருக்கும் என்பது பார்வையாளர்களுக்கு நன்கு தெரியும். இதை எல்லாம் பிக் பாஸுலேயே பார்த்தாச்சு பாஸு.

இன்று ஆர்யா தேர்வு செய்யும் பெண் அவரை திருமணம் செய்து கொண்டே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆர்யா வேண்டாம் என்று சொல்லிவிட்டு செல்லும் உரிமையும் அவருக்கு உண்டு. அப்படி அந்த பெண் சொல்லும்பட்சத்தில் ஆர்யாவுக்கு மறுபடியும் பெண் தேட வேண்டியதாக இருக்கும்.

எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் வெற்றி பெறும் பெண்ணை ஆர்யா திருமணம் செய்ய மாட்டார் என்று நெட்டிசன்கள் அடித்து சொல்கிறார்கள். திருமணம் நடக்குமா, இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

(Visited 135 times, 1 visits today)