பொதுநலவாய நாடுகளின் உள்ளுர் அரச பிரதிநிதிகள் மாநாட்டை இலங்கையில் 2019 இல் நடாத்துவதற்கு பொதுநலவாய உள்ளுர் அரச பிரதிநிதிகள் அமைப்பின் செயற்குழு தீர்மானித்துள்ளது.

லண்டன் நகரில் கடந்த 13 ஆம் திகதி ஆரம்பமான பொதுநலவாய நாடுகளின் உள்ளுர் அரச பிரதிநிதிகளின் செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு பொதுநலவாய நாடுகளின் உள்ளுர் அரச பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் மாநாடு மோல்டா நாட்டில் இடம்பெற்றது. இதன்போது அம்மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சர் பைஸர் முஸ்தாப அடுத்த மாநாட்டை இலங்கையில் நடாத்துமாறு பிரேரணையொன்றை முன்வைத்துள்ளார்.

இதனையடுத்து, இலங்கையில் நடாத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஆசிய நாடொன்றில் இம்மாநாடு நடைபெறுவது இதுவே முதல் தடவையாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

(Visited 32 times, 1 visits today)