தெலுங்கு சினிமாவில் வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் கொடுமை நடக்கிறது என நடிகை ஸ்ரீ ரெட்டி ஆடையை களைந்து புகார் செய்தார்.

இவரின் இந்த செயலால் ஆடிப்போய் உள்ள தெலுங்கு திரையுலம், அந்த பரபரப்பு அடங்குவதற்குள், மற்றொரு குணசித்திர நடிகை தான் சோனா ரத்தோட்.

ஹைதராபாத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகைகள், பெண் ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், என்.ஜி.ஓ.க்கள் கலந்து கொண்டனர்.

கண்ணீர் விட்ட சோனா :
நடிகைகள் வாய்ப்புக்காக பல கொடுமைகள் அனுபவிக்கின்றனர் என கண்ணீர் விட்டு அழுதார்.

தான் பட வாய்ப்பு ஒன்றை டிவியில் பார்த்து ஆடிஷனுக்கு சென்றேன். அங்கு நான் நிஜமாகவே திருநங்கை தான என நிரூபிக்க வலுகட்டாயமாக என் ஆடைகளை அவிழ்க்க வைத்தனர்.

வாய்ப்பு தருவதாக கூறியதால் அனுபவித்த கொடுமையை சொல்கிறார் சோனா ரத்தோட்

ஸ்ருதியின் கண்ணீர் பேட்டி :
அதோடு படங்களில் வாய்ப்பு அளிப்பதாக கூறி படுக்கைக்கு அழைத்தனர். பின்னர் நான் குண்டாகவும், கருப்பாகவும் இருப்பதாக கூறி நிராகரித்து விட்டனர் என கதறுகிறார் ஜூனியர் ஆர்டிஸ்ட் ஸ்ருதி.

கழிப்பிடம் கட்டி சுத்தமான பாரதத்தை உருவாக்க சொல்கின்றனர் நம் தலைவர்கள், ஆனால் படப்பிடிப்பு தளங்களில் ஒரு கழிப்பிடம் கூட இல்லாததால், பொதுவெளியில் செல்ல வேண்டியுள்ளது என புலம்புகிறார் ஸ்ருதி.

(Visited 58 times, 1 visits today)