ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் கடந்த 4-ந்தேதி முதல் நேற்று வரை 21-வது காமன்வெல்த் போட்டி நடைபெற்றது. உலகின் அதிவேக மனிதன் என்று அழைக்கப்படும் உசைன் போல்ட் ஓட்டப் பந்தயத்தில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு ஜமைக்கா அணி எதிர்கொள்ளும் மிகப்பெரிய தொடர் இதுவாகும்.

உசைன் போல்ட் அல்லாத ஜமைக்கா அணியால் ஓட்டப் பந்தயத்தில் ஜொலிக்க முடியுமா? என்ற ஆயிரமாயிரம் கேள்விகள் எழுந்தது. இந்த கேள்விகளை உறுதிப்படுத்தும் வகையில் ஜமைக்கா அணி ஒரு தங்கம் கூட கைப்பற்றவில்லை. இதனால் உசைன் போல்ட் அப்செட் ஆகியுள்ளார். அவர் தனது சமூக இணையத்தள பகுதியில் ‘‘ஓட்டப்பந்தயத்தை பார்த்த பிறகு எனக்குள்ளே சில கேள்விகளை எழுப்பியுள்ளது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஜமைக்கா சார்பில் யோகன் பிளேக் கலந்து கொண்டார். இவரை இரண்டு தென்ஆப்பிரிக்கா வீரர்கள் பின்னுக்குத் தள்ளினார்கள். 2011-ம் ஆண்டு தவறுதலாக ஓட்டத்தை தொடங்கியதாக போல்ட் தகுதி நீக்கம் செய்யப்பட்டபோது, பிளேக் தங்க பதக்கம் வென்றிருந்தார். ஆண்கள் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஜமைக்காவின் எதிரியாக இருக்கும் டிரினிடாட் அண்டு டொபாகோ வீரர் ஜெரீம் ரிச்சார்ட் தங்கம் வென்றார்.

அதேபோல் பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இரண்டு முறை ஒலிம்பிக் சாம்பியன் பட்டம் வென்ற எலைன் தாம்சன் தோல்வியடைந்தார். பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் மிட்செல்-லீ-ஆயே தங்கம் வென்றார். இதன்மூலம் உசைன் போல்டிற்குப் பிறகு ஜமைக்கா சிறந்த வீரர்களை உருவாக்குமா? என்ற கேள்வி எழும்பியுள்ளது.

(Visited 27 times, 1 visits today)