நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி வரும் டியர் காம்ரேட் திரைப்படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது!

அர்ஜூன் ரெட்டி திரைப்படத்திற்கு பின்னர் தெலுங்கு ரசிகர்களை தாண்டி தென்னிந்திய அளவில் ரசிகர் பட்டாளத்தை பெற்றவர் விஜய் தேவர்கொண்டா. அவரது அடுத்த படமான ‘டியர் காம்ரேட்’ தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் உருவாகி வருகிறது.

அர்ஜூன் ரெட்டி திரைப்படத்திற்கு பின்னர், அவருடைய அடுத்த தெலுங்குப் படமான ‘கீத கோவிந்தம்’ தமிழகத்தில் பல திரையரங்குகளில் வெளியாகி 75 நாள்கள் ஓடியது. அதைத் தொடர்ந்து, தமிழில், நேரடியாகக் கடந்த ஆண்டு அரசியல் த்ரில்லர் படமான ‘நோட்டா’ வாயிலாக அறிமுகமானார்.

இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் தரவில்லை, என்றபோதிலும் அவருக்குத் தமிழில் ஒரு நல்ல மார்க்கெட்டை உருவாக்கித் தந்தது.

இந்நிலையில், தற்போது அவர் நடித்துள்ள ‘டியர் காம்ரேட்’ திரைப்படம் தமிழ் உள்பட நான்கு தென்னிந்திய மொழிகளிலும் உருவாக்கப்பட்டு வருகிறது. பரத் கம்மா எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தில் ராஷ்மிகா நாயகியாக நடிக்கிறார். இவர் ஏற்கெனவே ஹகீத கோவிந்தம்’ படத்தில் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்தவர்.

ஹகீத கோவிந்தம்’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த இந்த ஜோடி தற்போது ‘டியர் காம்ரேட்’ திரைப்படத்திலும் இணைந்துள்ளதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் டீஸரினை படக்குழவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.

(Visited 1 times, 6 visits today)