இலங்கையின் அனைத்துப் பகுதியிலும் வாழும் தமிழ் மக்கள் ஒன்று சேர்ந்தால் மாத்திரமே, ஈழத்தமிழர்கள் என்ற உண்மையான தமிழ் தேசிய இனத்தை உருவாக்க முடியும் என்று தெரிவித்த தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன், இதன்மூலம், தமிழர்களின் அடையாளத்தையும் இருப்பையும் அறிவிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

​ எங்க​ளை நாமே தாழ்த்தி வைத்துக்கொண்டிருப்போம் என்றால், பெரும்பான்மை இனத்தவர்களிடம், சம உரிமையைக் கோருவதற்கான தார்மீக உரிமையை நாம் இழந்துவிடுவோம் என்று கூறிய அவர், எனவே, எம்மை நாம் திருத்திக்கொள்ளவேண்டும் என்று அவர் கூறினார்.

இன்று உள்ள பாராபட்சங்கள், தள்ளிவைப்புகள் அனைத்தும், தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் இருக்கவில்லை என்று கூறிய அவர், இன்று சமாதானம் வந்துவிட்டது, சட்டத்தின் ஆட்சி வந்திருப்பதாகக் கூறினாலும், அன்று இருந்த சமத்துவம், இன்று காணாமல் போய்விட்டது என்றும் கூறினார்.

அப்படியானால், புலிகள் மீண்டும் வந்து, சமத்துவத்தை நிலைநாட்டவேண்டுமா என்றும் என்றும் அவர் இதன்போது கேள்வியெழுப்பினார்.

எனினும், தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரைக் கூறி அரசியல் செய்யும் பலர்கூட, மலையக மக்கள் மீது பாரபட்சம் காட்டும் செயற்பாடுகளை இன்றும் முன்னெடுத்து வருவதாகவும் எனவே, இன்று உருவாகியுள்ள அமைப்பு, பிரதேசவாதத்தைத் தூண்டும் ஒரு அமைப்பாக இருக்ககூடாது என்றும் அவர் கூறினார்.

(Visited 1 times, 1 visits today)