வடக்கில் அரசியல் தலைவர்கள் அதிகாரப் பகிர்வை எதிர்பார்க்கின்ற போதிலும் மக்களின் உண்மையான நிலைமை அதுவல்ல,அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்து சிறந்த வாழ்க்கையை அமைத்துக் கொள்வதே அவர்களின் எதிர்ப்பார்ப்பு என சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்ன தெரிவித்துள்ளார்.

பண்டாரகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தை மேற்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் ஆவா குழுவின் ஒருங்கிணைப்பாளர் அருண் சித்தார்தை சந்தித்த போது இந்த விடயம் தொடர்பில் அறிய முடிந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

(Visited 1 times, 1 visits today)