நாய்கள் சிறுநீர் கழிப்பதற்காக அந்நாடு அதிபர் டிரம்ப்பின் உருவ சிலை சாலையில் வைக்கப்பட்டுள்ளது  பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நியூயார்க்கில் உள்ள புரூக்ளின் நகரின் சாலையோரத்தில் புல் வளர்கப்பட்டு  அதில் அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் சிலை சுமார் ஒரு அடி உயரத்திற்கு சிறிய அளவில் அமைக்கப்பட்டுள்ளது.அந்த சிலையில் ‘’என்மீது சிறுநீர் கழிக்கவும்’’ என்ற வாசகம் எழுதப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தச் சிலையை பில் கேப்லே என்பவர் வடிவமைத்துள்ளார்.டிரம்ப் ஒரு சிறந்தஅதிபராக செயல்படவில்லை  அந்த ஆத்திரத்தில்தான் இப்படி ஒரு சிலையை வடிவமைத்துசாலையின் நடுவேவைத்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.

முன்னதாக அமெரிக்க அதிபர் தேர்தலின் போது குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் போடியிட்டதை எதிர்த்து பலர் பிரசாரத்தில் ஈடுபட்டனர். அப்போதுகவனத்தை ஈர்ப்பதற்காக வெஸ்ட் கோஸ்ட்அனார்சிஸ்ட் என்ற நிறுவனம்டிரம்ப்பை போல் ஐந்து நிர்வாண சிலைகளைதயாரித்து காட்சிப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

(Visited 1 times, 1 visits today)