OPPOவின் VOOC தொழில்நுட்பம் என்பது பாரம்பரிய சார்ஜர்களுடன் ஒப்பிடுகையில், 4 மடங்கு வேகமாக சார்ஜ் செய்யக்கூடிய திறனைக் கொண்ட தொழில்நுட்பமாகும். VOOC flash charging கட்டமைப்பினூடாக அவசரமாக வெளியே செல்ல வேண்டிய வேளைகளின் போது, தொலைபேசியை துரிதமாக சார்ஜ் செய்து கொள்ளலாம்.

பாரம்பரிய சார்ஜர்களுடன் ஒப்பிடுகையில், இதில் காணப்படும் 5 லேயர் பாதுகாப்பினூடாக, 5 லேயர் பாதுகாப்பினூடாக அடெப்டரிலிருந்து போர்ட்டுக்கான பாதுகாப்பை வழங்குவதுடன், தொலைபேசியின் உள்ளக பகுதிக்கும் பாதுகாப்பைச் சேர்க்கிறது.

VOOC இல் MCU உடனான வோல்ட் குறைப்பு மின்சுற்று இணைக்கப்பட்டுள்ளது. இதனூடாக, சார்ஜ் செய்யப்படும் போது தொலைபேசி அளவுக்கதிகமான வெப்பமேற்றமடைவது தவிர்க்கப்படும். S1 ப்ளஸ் அறிமுகத்துடன் OPPO இனால் VOOC சார்ஜர் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. வர்த்தக நாமத்தினால் சிறிய மற்றும் மதிநுட்பமான துரித சார்ஜ் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதுடன், 5 நிமிடங்கள் வரை சார்ஜ் செய்து, 2 மணித்தியாலங்கள் வரை உரையாடக்கூடிய வசதி வழங்கப்படுகிறது.

LED குறிகாட்டியினூடாக, தொலைபேசி சார்ஜ் செய்யப்படுவது தொடர்பில் திரையில் பாவனையாளர்கள் பார்க்க வேண்டியதில்லை. குறிகாட்டியினால் VOOC இல் USB இணைக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பது சுட்டிக்காட்டப்படும்.

OPPO சாதனங்களுடன், ஏனைய வர்த்தக நாமங்களுடன் ஒப்பிடுகையில், அதிகளவு தரத்தை OPPO கொண்டுள்ளது. OPPO  ஐ பொருத்தமட்டில், தயாரிப்பு மற்றும் பரிசோதனை போன்றன உள்ளக நடவடிக்கையாக முன்னெடுக்கப்படுகிறது. இதனூடாக தரம் உறுதி செய்யப்படுகிறது.

(Visited 1 times, 1 visits today)