தரமான அரசியல் மாற்றமொன்றுக்காகவும் அரசியல் யாப்பு மாற்றமொன்றுக்காகவும் நாட்டிலுள்ள தமிழ், முஸ்லிம் தரப்பினருடன் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

எமது நாட்டில் முழுமைபெற்ற ஒரு இனத்தைக் கட்டியெழுப்புவதே எனது நீண்ட கால இலக்காகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தியாவின் புதுடில்லியின் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே மஹிந்த ராஜபக்ஷ இதனைக் கூறினார்.

மீளமைப்பு நடவடிக்கைகள் நாட்டுக்குப் பொருத்தமானதாகவும், நாட்டின் கலாசாரத்துக்கு உட்பட்டதாகவும் இருக்க வேண்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். எடுக்கும் எந்தவொரு தீர்மானமும் நாட்டின் சகல தரப்பினருக்கும் பொதுவானதாகவும் இருக்க வேண்டும் எனவும் அவர் தனது நீண்ட உரையில் குறிப்பிட்டார்.

(Visited 1 times, 1 visits today)