முருகதாஸ் இயக்கத்தில்நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் ‘சர்கார்’. இத்திரைப்படத்தின் டப்பிங் வேலைகள் முடிவடைந்துள்ளதாக நடிகை வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார்!

சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர்   முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்துவரும் திரைப்படம் சர்கார். இப்படத்தின்   போஸ்டர் வெளியாகி பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் WorkingStills-னை படக்குழுவினர் தினம் ஓன்று வீதத்தில் வெளியிட்டு சார்கார் காய்ச்சலை ரசிகர்களிடையே உண்டாக்கி வந்தனர்.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் டப்பிங் வேலைகளில் தனது பாகத்தினை முடித்துள்ளதாக இப்படத்தில் நடித்துள்ள நடிகை வரலட்சுமி சரத்குமார் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக தெரிவித்துள்ளார்.

மேலும் தளபதி விஜய் உடன் நடிக்க வேண்டும் என்ற  தனது கனவினை நிறைவேற்றிய இயக்குநர் முருகதாஸ் அவர்களுக்கும் நன்னி என அவர் இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக இத்திரைப்படத்தின் இசை வரும் அக்டோபர் மாதம் 2-ஆம் நாள் வெளியாகும் என படக்குழுவினர் அறிவிதுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ஏ.ஆர். ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்து வருவது அனைவரது எதிர்பார்ப்பையும் தூண்டியுள்ளது.

(Visited 1 times, 1 visits today)