சன்னிலியோனின் வாழ்க்கை தொடரான ‘தி அன்டோல்ட் ஸ்டோரி ஆஃப் சன்னி லியோன்’-னின் இரண்டாம் பாகம் வெளியாகிறது….!

பாலிவுட் திரையுலகின் பிரபலமாணவர்களில் முக்கயமானவர் சன்னிலியோன். அவரது முகத்திற்கு பின்னால் பலதர விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் அவரது வாழ்க்கை பயணம் என்பது அவரக்கு எளிமையானதாக அமைந்துவிடவில்லை என்பதை யாரும் உணர தயாராக இல்லை.

பாலிவுட் திரைவுலகில் நுழைந்த பின்னர் விரைவிலே பெரும் புகழை அடைந்துவிட்டார் அவர். இந்நிலையில் அவரது வாழ்க்கை வரலாற்றினை Zee குழுமத்தின் டிஜிட்டல் தளமான Zee5 ஒளிப்பரப்ப உள்ளதாக ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில்  கடந்த ஜூலை 16 ஆம் தேதி ‘தி அன்டோல்ட் ஸ்டோரி ஆஃப் சன்னி லியோன்’-னின் வாழ்க்கை வரலாற்று தொடர் வெளியானது.

ஹிந்தியில் வெளியான இந்த வாழ்க்கை வரலற்றுத் தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில்  சன்னிலியோனின் வாழ்க்கை தொடரான ‘தி அன்டோல்ட் ஸ்டோரி ஆஃப் சன்னி லியோன்’-னின் இரண்டாம் பாகம் வெளியிடுவதாக Zee5 குழுமம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அந்த பதிவில் நடிகை சன்னிலியோன் கூறுகையில், தி அன்டோல்ட் ஸ்டோரி ஆஃப் சன்னி லியோன்-னின் வாழ்க்கை தொடரின் இரண்டாம் பாகம் Zee5-ல் விரைவில் வெளியாக உள்ளது. இரண்டாம் பாகம் இன்னும் ஆரவத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளது எனவும்  முதல் பாகத்தில் சொல்லாத நிறைய கதைகளை இரண்டாம் பாகம் கொடுக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

(Visited 19 times, 1 visits today)