இன்றைய மாணவன்!! நாளைய மன்னவன்!! சமூக வலைதளங்களில் கலக்கும் ஹிப் ஹாப் தமிழாவின் ஆல்பம்.

72-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கிப்கொப் தமிழா ஆதி “மாணவன்” என்ற ஆல்பம் வெளியிட்டார். தற்போது இந்த ஆல்பம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதுவும் யூ-டூப் டிரேண்டிங்-ல் முதலிடத்தை பெற்றுள்ளது. ஆல்பம் வெளியாகி இரண்டு நாட்கள் ஆன நிலையில் 2.5 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. கிப்கொப் தமிழா இசை அமைக்க, ஆனந்த் இயக்கியுள்ளார்.

இன்றைய இளைஞர்கள் என்ன செய்ய வேண்டும், வளரும் இளம் தலைமுறையினரின் முக்கியமான ஆயுதம் “கல்வி”. ஒரு மாணவன் நினைத்தால் மாறிடும் சமுதாயம், பெண்களுக்கு சம உரிமைஇ தாய்மொழி என பேசுகிறது “மாணவன்” ஆல்பம். “கல்வி”யால் முடியும் எனக்கூறி, இதுவரை சாதனை செய்த சில மாணவர்களை உதாரணமாக காட்டியது என அருமை. அனைவரும் பார்க்ககூடிய ஒரு ஆல்பமாக வந்துள்ளது ஹிப் ஹாப் தமிழாவின் “மாணவன்”.

மாணவன் ஆல்பம்:-

(Visited 10 times, 1 visits today)