2023ஆம் ஆண்டில் உலகின் நம்பர் ஒன் பணக்கார அந்தஸ்தை கத்தார் இழக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

சூதாட்ட வருவாய் அடிப்படையில் உலகிலேயே முதல் இடத்தில் உள்ளது கத்தார். சீனாவின் மக்காவு நகரில் பெருகியுள்ள சூதாட்டத்தினால் அந்த நகரம் 2023ஆம் ஆண்டு கத்தாரை முந்தி முதலிடம் பிடிக்கும் என்று ஐ.எம்.எஃப். அறிக்கை தெரிவிக்கிறது.

சீனாவின் தென் பகுதியில் உள்ள மக்காவு கடந்த 20 ஆண்டுக்களுக்கு முன் சீன அரசின் கட்டுப்பாட்டிற்கு வந்தது. அதிலிருந்து அங்கு சூதாட்டம் மிகவும் அதிகிரித்து வருகிறது. அந்நாட்டில் சூதாட்டம் சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட ஒரே இடம் மக்காவு என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனால், வரும் 2023ஆம் ஆண்டில் மக்காவு நகரின் ஜிடிபி 1,72,681 டாலர் ஆக உயரும் என்றும் கத்தாரின் ஜிடிபி அப்போது 1,58,117 டாலராக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 95 times, 1 visits today)