கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் 19 வயதுக்கு உள்பட்டோருக்கான இந்திய அணியில் விளையாடி வருகிறார். தற்போது, இங்கிலாந்து எம்.சி.சி ஜூனியர் அணியில் பயிற்சி எடுத்து வரும் அவர், இந்திய அணி வீரர்களுக்கு பயிற்சியின் போது பந்துவீசி வருகிறார்.

லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் நாளில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது. அப்போது, லார்ட்ஸ் மைதான ஊழியர்களுக்கு ஆடுகள பராமரிப்பில் அர்ஜுன் உதவி செய்தார்.

மழையால் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் மைதானத்தை உலர வைக்கும் பணியில் ஊழியர்களுக்கு அர்ஜுன் டெண்டுல்கர் உதவி புரிந்துள்ளார். இதனை லார்ட்ஸ் மைதானம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

மேலும், லார்ட்ஸ் மைதானத்துக்கு வெளியே அர்ஜுன் டெண்டுல்கர் நேற்று ரேடியோக்களை விற்றார். இதை பார்த்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டரில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். அர்ஜுனிடம் பெரும்பாலான ரேடியோக்கள் விற்றுவிட்டன. சில மட்டுமே கையிருப்பில் உள்ளன எனக் கூறியுள்ளார்.

(Visited 78 times, 1 visits today)