பாகிஸ்தான் பிரதமாக பொறுப்பேற்க உள்ள அந்நாட்டு முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் வீட்டு வளர்ப்புப் பிராணிகள் பற்றி விக்கிபீடியாவில் தனி கட்டுரை உள்ளது!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான் அண்மையில் நடைபெற்ற அந்நாட்டுப் பிரதமர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். வரும் 11ஆம் தேதி பாகிஸ்தான் பிரதமராக அவர் பொறுப்பேற்கிறார்.

இந்நிலையில்  அவர் வீட்டு நாய்க்குட்டிகள், கோழிக்குஞ்சுகள், பசுக்கள் மற்றும் எருமைகள் குறித்து உலகப் புகழ்பெற்ற இணையக் கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் கட்டுரை ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் அவற்றின் பெயர், அவை வளர்க்கப்பட்ட காலம் ஆகியவையும் உள்ளன.

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் செல்லப் பிராணிகள் பற்றியும் விக்கிபீடியாவில் ஒரு கட்டுரை உள்ளது. அவருக்குப் பிறகு இம்ரான் கானின் செல்லப் பிராணிகள் பற்றியே கட்டுரை எழுதப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

(Visited 52 times, 1 visits today)