இலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 4 ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை புதன்கிழமை கண்டி பள்ளேகல மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது.

இலங்கை வந்துள்ள தென்னாபிரிக்க அணி முதலில் 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற நிலையும் தற்போது 5 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது.

ஏற்கனவே 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில், 3 போட்டிகளிலும் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி தொடரை கைப்பற்றிய நிலையில் இன்றைய தினம் 4 ஆவது ஒருநாள் போட்டியில் இவ்விரு அணிகளும் மோதவுள்ளன.

2 டெஸ்ட் போட்டிகளிலும் தென்னாபிரிக்க அணி தோல்வியை தழுவிய நிலையில் மிகுதி 2 ஒருநாள் போட்டிகளிலும் வெற்றிபெற்று தொடரை முழுமையாக கைப்பெற்றி இலங்கை அணியை வெள்ளையடிக்கும் நோக்கில் இன்றைய போட்டியிலும் தென்னாபிரிக்க அணி வெற்றிபெற கடுமையாக முயலுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை தென்னாபிரிக்க அணியுடன் கடைசியாக விளையாடிய 11 ஒருநாள் போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியுள்ள இலங்கை அணி அந்தத் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதுடன், 5 போட்டிகளிலும் தோல்வியடைவதை தவிர்ப்பதற்காக நாளைய போட்டியில் எப்படியாவது வெற்றிபெற கடுமையாகப் போராடுமென எதிர்பார்க்கப்படுகிறது.

(Visited 30 times, 1 visits today)