அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிரான பாரிய ஆர்ப்பாட்டமொன்று எதிர்வரும் ஆகஸ்ட் 17 ஆம் திகதி கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

கூட்டு எதிரணி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் பொதுஜன இளைஞர் முன்னணி என்பன இணைந்து இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.

இதுவரையில் கண்டிராத பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கூட்டமொன்றை இதன்போது கூட்டவுள்ளதாகவும் அவர் கூறினார்.

பொலிஸார் நீதிமன்ற தடை உத்தரவை பெற்று ஆர்ப்பாட்டத்தை நடக்க விடாமல் முட்டுக்கட்டை போடுவார்கள் என்பதற்காக எதிர்வரும் 17 ஆம் திகதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்தை முன்னரே அறிவிக்காதிருக்கின்றோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

(Visited 30 times, 1 visits today)