உலகிலேயே மிகவும் அவலட்சணமான நாயாக தேர்வு செய்யப்பட்ட அமெரிக்காவை சேர்ந்த இட்சா இட்சா நாய் சில் வாரங்களுக்கு முன்பு மரணமடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மினிசோட்டா மாகாணத்தில் வாழ்ந்து வரும் அனோகோ என்பவருக்கு சொந்தமான நாய் இட்சா இட்சா. இது ’இங்கிலீஷ் புல் டாக்’ வகையை சேர்ந்தது.

பார்க்கவே பயங்கரமாகவும்  பல செண்டிமீட்டர் அளவிலான நாக்கை கொண்டதற்காக்கவும் இந்த நாய் சமீபத்தில் நடந்து முடிந்த போட்டியில், உலகின் மிக அசிங்கமான நாயாக தேர்வு செய்யப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இட்சா இட்சா நாய் இறந்து விட்டதாகவும். தூங்கும் போதே அது மரணமடைந்து விட்டதாகவும் உரிமையாளர் அனோகோ தெரிவித்துள்ளார்.

நாயின் வாயிக்குள் அதன் நாக்கை வைக்க முடியாததால் வாயிலிருந்து எச்சில் வந்து கொண்டே இருக்கும். அதன் பற்களும் நீளமாக இருக்கும் என்றார் அனோகோ.

மரணமடைந்த இட்சா இட்சா நாயிக்கு 9 வயது தான் ஆகிறது. உலகிலேயே அவலட்சணமான நாயாக தேர்வு செய்யப்பட்ட பிறகு அதனை கொண்டாட ஏற்பாடுகள் செய்திருந்தார் உரிமையாளர் அனோகா.

ஆனால் அதற்குள் இட்சா இட்சா இறந்து விட்டதாக மிகவும் வருத்தமாக தெரிவித்தார் அனோகா. தற்போது இட்சா இட்சாவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள் தெரிவித்து பலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

(Visited 24 times, 1 visits today)