விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இன்று ஆண்களுக்கான காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.

இரண்டாவது காலிறுதியில் முதல் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 8ம் நிலை வீரரான தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சனை எதிர்கொண்டார்.

பெடரர் முதல் செட்டை 5-2, இரண்டாவது செட்டை 7-6 என கைப்பற்றினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆண்டர்சன் 5-7, 4-6 என அடுத்த இரண்டு செட்களை கைப்பற்றினார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் ஐந்தாவது செட்டில் இருவரும் தீவிரமாக போராடினர். இறுதியில், ஆண்டர்சன் 11-13 என் அந்த செட்டை கைப்பற்றி அசத்தினார்.

ஆட்டத்தின் முடிவில் 6-2, 7-6, 5-7, 4-6, 11-13 என்ற கணக்கில் பெடரர் போராடி தோல்வி அடைந்து அரையிறுதி வாய்ப்பை இழந்தார்.

(Visited 19 times, 1 visits today)