பூப்படைதல் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் முக்கிய அங்கம். ஆனால் சரியான காலத்தில் ஆகாமல் இருப்பது தான் இங்கு பிரச்னை. சில பெண்களுக்கு 8-9 வயதில் என முன்னதாகவே ஆவதும்இ சிலருக்கு 15 வயதை தாண்டியும் பூப்படையாமல் இருப்பதும் ஒரு சேர காணமுடிகிறது. இப்படி பூப்படைதலில் உள்ள பிரச்னைகளை இங்கு பார்க்கலாம்.

முன்னதாக பூப்படைதலுக்கு காரணங்கள் :

1. சுற்றுச்சூழல் காரணங்கள்

2. மரபியல் காரணங்கள்
3. சுற்றுச்சூழல் காரணங்கள்:

சுற்றுச்சூழல் காரணிகளில் முக்கிய இடம் பிடிப்பது அவர்களின் உணவுமுறை.

1. பால் பொருட்கள்:

ஆய்வில் சிறுவயதிலிருந்து அதிகம் பால் குடிக்கும் சிறுமிகள் சீக்கிரமாக பூப்படைகின்றனர். பால் மட்டுமல்ல  பால் பவுடரும்இ பால்பவுடர் கலந்து செய்யப்படும் சாக்லேட்டுகளாலும் இது நிகழக் கூடும். அளவுக்கு அதிகமாய் மில்க் சாக்லேட் சாப்பிடும் கூட்டம் இன்று நடுத்தர வர்க்கத்தில் அதிகம்.

மாட்டுப்பாலினால் ஏன் தீமை?

மாட்டிலிருந்து அதிக பால் பீச்ச சுஊடீபுர்RCBGH(recombinant bovine growth hormone) என்ற ஹார்மோன் சேர்க்கப்படுவதால்  பால் மற்றும் அதிலிருந்து தயாரிக்கப்படும் சாக்லெட்டை உட்கொள்ளும் பெண் குழந்தைகளை விரைவில் பூப்பெய்த வைக்கும்.

அதிக உடல் எடை :

சராசரியை விட அதிக உடல் எடையுடன் இருக்கும் பெண் குழந்தைகள் விரைவில் பூப்படைகின்றனர் என்கிறது ஆய்வு. மேலும் சரியான மாத சுழற்சியில் மாதவிலக்கு ஆவதிலும் பிரச்னை ஏற்அடுகிறது. சினைப்பையில் நீர்கட்டிகள் உருவாகி இந்த பிரச்னையை ஏற்படுத்துகிறது.

பிராய்லர் கோழி :

பிராய்லர் கோழிகளை எடை அதிகரிக்கவும்  சீக்கிரம் வளர்க்கவும் அதற்கு சில ஹார்மோன் ஊசிகள் போடப்படுகின்றன. இதை உட்கொள்ளும் சிறுமிகள் முன்னதாகவே பூப்பெய்துவதற்கானக் காரணமாக கருதுகிறார்கள். நாட்டுக் கோழியை கொடுக்கலாம் அதுவும் அளவோடு. வளரும் பிள்ளை தானே என்று அளவுக்கு அதிகமாய் கொடுக்கும் எதுவும் ஆபத்தே.

பதப்படுத்தப்பட்ட உணவுகள்:

பிராய்லர் கோழியில் மட்டுமல்ல, பதப்படுத்தபட்டு டின்களில் அடைக்கபட்ட விலங்கு இறைச்சிகளில் அதிக எடை கிடைக்க பல ஹார்மோன்கள் சேர்ப்பது வாடிக்கையானதாகிவிட்டது. இதில் ஈஸ்டர்டியால் ஹார்மோன் கொஞ்சம் கூடுதலாக சேர்க்கப்படுவதால் பெண்கள் பூப்படைவது அதிகரிக்கிறது.

ஓட்ஸ் உணவுகள்:

வணிக உத்திகளுக்காக நம் பாரம்பரிய தானியங்களை மறந்து, ஓட்ஸ் உடலுக்கு நல்லது என விளம்பரம் செய்யப்படுகின்றது. இதனால் உடல் எடை குறையும் என்பது கட்டுக்கதை என சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மேலும் ஓட்ஸிலும் ஈஸ்ட்ரோஜனை அதிகம் தரும் க்ளூட்டன் சத்து கூடுதலாக உள்ளது

 மரபியல் காரணங்கள்:

மரபியல் ரீதியான பிரச்னையில்  பூப்பெய்துவதைத் தூண்டும் எல்.ஹெச். மற்றும் எப்.எஸ்.ஹெச். ஹார்மோன்கள் இளம் வயதிலேயே அதிகமாகச் சுரப்பது விரைவான பூப்படைதலுக்கு ஒரு முக்கியக் காரணம்.

விரைவான பூப்பால் நேரிடும் பெரும் அபாயம்:

விரைவில் பூப்பெய்தும் சிறுமிகளுக்கு மார்பக புற்றுநோய் வர வாய்ப்பு அதிகம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் இவர்களின் வாழ்நாள் விகிதம், சரியாக பூப்பெய்தும் பெண்ணை விட குறைவு என புள்ளி விபரங்கள் சொல்கின்றன.

மருத்துவ ரீதியில் வகைப்படுத்தப்பட்ட காரணிகள்:

சீக்கிரம் பூப்படைவதை மருத்துவரீதியாக இரு வகைகளாகப் பிரிக்கலாம். பிட்யூட்டரி சுரப்பி சார்ந்து வருவதை  ஹசென்ட்ரல் பிரிகோசியஸ் பியூபெர்ட்டி’ (Central precocious puberty)  என்றும்  பிட்யூட்டரி சுரப்பி தொடர்பு இல்லாமல்  நேரடியாக ஹார்மோன் தொந்தரவுகளால் வருவதை ஹபெரிபெரல் பிரிகோசியஸ் பியூபெர்ட்டி’ (Peripheral precocious puberty)  என்றும் வகைப்படுத்தலாம்.

தாமதித்த பூப்படைதல்:

பெண்ணின் இனப்பெருக்க உறுப்பில் ஏற்படும் வளர்ச்சி மற்றும் மாற்றங்களை உருவாகுவதில் காரணமாக ஹார்மோன்கள் முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த ஹார்மோன்களை சுரப்பதில் முக்கிய பங்கு வகிப்பது மூளைக்கு கீழ் உள்ள பிட்யூட்டரி சுரப்பி.

ஒரு பெண் பூப்படையும் வயதில் பிட்யூட்டரி சுரப்பி ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரக்கிறது. இந்த சுரப்பின் மாறுபாடு காரணமாக பூப்படைதல் சீக்கிரமாகவும்  தாமதகாமவும் ஏற்படுகிறது.

மற்ற பெண்கள் பூப்படைந்த நேரத்தில்  தான் பூப்படைய வில்லையே என ஒரு பெண் நினைக்கும் போதுஇஅந்த பெண்ணிடம்  “தனக்கு எதாவது நோய் வந்துவிட்டதோ.” என்ற பயம் வருவது இயல்பானது. அதை சரியான நேரத்தில் கண்டுபிடித்து மருத்துவ சிகிச்சை அளித்தால் பூப்படைதல் சாத்தியமாகும்.

இன்றைய காலத்தில் சிறுவயதிலிருந்து பெண்களை விளையாட விடாமல் வீட்டிலேயே பூட்டி வைப்பதால் பிரச்னை ஏற்படுவதுடன்  சரியான உணவு முறை பின்பற்றாததும் அவர்களின் பூப்படைதல் முதல் அவர்கள் குழந்தை பேறுக்கு கூட பிரச்னை ஏற்படுகின்றது.

(Visited 313 times, 1 visits today)