அமெரிக்க விஞ்ஞானிகள் அரிசியை விட சிறிய அளவிலான உலகத்தின் மிகச் சிறிய கணினியைக் கண்டுபிடித்துள்ளனர்.

அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள், உலகின் மிகச் சிறிய கணினியைக் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.

இந்த கணினி வெறும் 0.3 மில்லி மீற்றர் மட்டுமே அளவுடையது. இதற்கு மிச்சிகன் மைக்ரோ மோட் என பெயரிடப்பட்டுள்ளது. மிச்சிகன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்ததால் இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த கணினிக்குள் சிறிய LED விளக்கு பொருத்தப்பட்டுள்ளது. தகவல் பகிரப்படும்போது இந்த விளக்கு மிளிரும். அதற்கான மின்சாரத்தை கணினி செயல்படும்போது, அதுவே உற்பத்தி செய்துகொள்ளும் தன்மையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆனால், இது அளவில் மிகச் சிறியது என்பதால், இந்த கணினியைப் பயன்படுத்தும்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டால், அதில் சேகரிக்கப்பட்ட தகவல்கள் முற்றிலும் அழிந்துவிடும்.

மிகச் சிறிய கணினியாக இருந்தாலும், இதன் பயன்கள் மிகவும் அதிகமாகும். இந்த கணினி புற்றுநோயைக் கண்டறியவும், சிகிச்சை அளிக்கவும் பயன்படும்.

எண்ணெய் வித்துக்களின் இருப்பிடங்களைக் கண்டறியவும், கண்ணில் ஏற்படும் க்ளாகோமா நோயின் அழுத்தத்தை அறியவும், சிறிய ரக நத்தைகள் தொடர்பாக ஆராயவும் பயன்படும்.

மேலும், உயிர்வேதியியல் செயல்முறைகளைக் கண்காணிக்கவும் பயன்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன், தற்போது இந்த சிறிய கணினியில் உள்ள சிரமங்களும் பிற்காலத்தில் மேம்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

(Visited 77 times, 1 visits today)