சிறிய மற்றும் நடுத்தரளவு தொழில் முயற்சியாளர்களின் தரத்தை மேம்படுத்துவதற்கு வழங்கும் பங்களிப்பை மேலும் உறுதி செய்யும் வகையில், செலான் வங்கி தனது “Seylan SME Hub’ எனும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. சிறிய மற்றும் நடுத்தரளவு தொழில் முயற்சியாளர்களுகு சௌகரியமான மற்றும் துரிதமான நிதிச் சேவைகளை பெற்றுக் கொடுப்பதுடன், அவர்களுக்கு விசேட ஆலோசனை உதவிகளை வழங்கும் திட்டமாக இது அமைந்துள்ளது.

இலங்கையில் காணப்படும் மொத்த வியாபாரங்களில் சுமார் 75 சதவீதமானவர்கள் சிறிய மற்றும் நடுத்தரளவு தொழில் முயற்சியாளராக காணப்படுகின்றனர். இவர்களினூடாக மொத்த தேசிய உற்பத்தியில் 52 சதவீதத்துக்கும் அதிகமான பங்களிப்பு வழங்கப்படுகிறது. உலகமயமாக்கலுக்கமைய, பொருளாதார வளர்ச்சியை முன்னெடுப்பதில் சிறிய மற்றும் நடுத்தரளவு தொழில் முயற்சியாளர்கள் முக்கிய பங்களிப்பை வழங்குகின்றனர். Seylan SME Hub அறிமுகத்தினூடாக, இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தரளவு தொழில் முயற்சியாளர் துறைக்கு நவீன நிதிசார் மற்றும் தொழில்நுட்ப அறிவை வழங்கி அவர்களுக்கு வலுச்சேர்க்கும் முக்கியமான மற்றுமொரு நடவடிக்கையை செலான் வங்கி உறுதி செய்துள்ளது.

இந்த அறிமுகம் தொடர்பில், செலான் வங்கியின் கிளை கடன் பிரிவின் பொது முகாமையாளர் கே.டி. டபிள்யு. ரோஹண கருத்துத் தெரிவிக்கையில், எமது தேசத்தின் பொருளாதாரத்தில் சிறிய மற்றும் நடுத்தரளவு தொழில் முயற்சியாளர் பிரிவு முக்கிய பங்களிப்பை வகிக்கிறது. அவர்களின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொண்டு, செலான் வங்கியைச் சேர்ந்த நாம், சிறிய மற்றும் நடுத்தரளவு தொழில் முயற்சியாளர்களை வலுவூட்ட முன்வந்ததுடன், அவர்களுக்கு புத்தாக்கமான நிதிசார் தீர்வுகளை பெற்றுக் கொடுப்பது மட்டுமன்றி, நிதி முகாமைத்துவம் மற்றும் தொழில்வாழ்க்கை சமநிலை பற்றி விளக்கங்களை வழங்கி, சிக்கல்களின்றி முன்நோக்கி பயணிப்பதற்கு வழிகாட்டுகிறோம் என்றார்.

Seylan SME Hub ஐ செலான் வங்கியின் நாடு முழுவதிலும் காணப்படும் 168 கிளை வலையமைப்பினூடாக அணுகக்கூடியதாக இருக்கும் என்பதுடன், இதனூடாக சிறிய மற்றும் நடுத்தரளவு தொழில் முயற்சியாளர்களுக்கு அர்ப்பணிப்பான வங்கியியல் சேவைகளை அனுபவிக்கக்கூடியதாக இருக்கும். செலான் வங்கியின் உயர் பயிற்சிகளைப் பெற்ற நிதிசார் ஆலோசனை அணியினரால் சிறிய மற்றும் நடுத்தரளவு தொழில் முயற்சியாளர்களுக்கு அவசியமான உதவிகளை பெற்றுக் கொடுக்க தயாராகியுள்ளதுடன், அவர்களின் வியாபார இலக்குகளை எய்துவதற்கு நிதி முகாமைத்துவம் மற்றும் டிஜிட்டல் வங்கியியல் பற்றிய ஆலோசனைகளை வழங்கவும் தீர்மானித்துள்ளது.

(Visited 30 times, 1 visits today)