இந்திய விடுதலை போராட்டத்தின் தந்தை என போற்றப்படுபவர் மகாத்மா காந்தி. இவர் கடந்த 1924-ம் ஆண்டு அன்னி பெசண்ட் அம்மையாருக்கு எழுதிய கடிதம் ஒன்றை அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் ஒன்று ஏலத்தில் விட்டது.

அந்த கடிதத்தில்  உங்களது கடிதத்துக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். என் மகன் தேவதாஸ் இன்றிரவு புறப்படுகிறான். அவரது செலவுகள் பற்றி கவலைப்பட வேண்டாம் என பிரார்த்தனை செய்கிறேன். அவன் உங்கள் விருந்தாளியாக ஒரு கவுரவத்தை பெற்றுள்ளார். நீங்கள் அனுப்பிய கதர் துண்டுகளை ஜம்னதாஸ் என்னிடம் கொடுத்தார். நான் அந்த பரிசை பத்திரமாக வைத்து கொள்வேன்: நூற்பு மிகவும் நன்றாக இருந்தது  என எழுதியிருந்தார்.

இந்த கடிதத்தில் மகாத்மா காந்தி கையொப்பமிட்டிருந்தார். அந்த கடிதத்திற்கான ஏலம் கடந்த 13-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இறுதியில் அந்த கடிதத்தை ஒருவர் 20,233 அமெரிக்க டாலருக்கு  ஏலத்தில் எடுத்துள்ளார்.

(Visited 16 times, 1 visits today)