21-வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் இன்று வியாழக்கிழமை கோலாகலமாகத் தொடங்குகிறது. விழாக்கோலத்துக்கு இடையே ஒரு சர்ச்சையும் கிளம்பியிருக்கிறது.

இந்தக் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ,

பிபா உலகக் கோப்பை விளையாட்டு நடைபெறும் காலகட்டத்தில் ரஷ்யப் பெண்கள் வெள்ளையர் அல்லாத வெளிநாட்டு ஆண்களுடன் உறவு கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அப்படி உறவு கொள்ளும் பெண்கள் சிங்கிள் மதராக வாய்ப்புள்ளது. அவர்களது குழந்தைகள் கலப்பினப் பிள்ளைகளாக இருப்பர். அவர்களுக்கு சமூகத்தில் அங்கீகாரம் கிடைக்காமல் போகலாம் எனக் கூறியுள்ளார்.

நாம் நமது குழந்தைகளைப் பிரசவிக்க வேண்டும். கலப்பினக் குழந்தைகள் சோவியத் காலத்தில் அடுக்குமுறைக்கு உள்ளாகினர். இப்போதும், கலப்பினக் குழந்தைகள் அடக்குமுறைக்கு உள்ளாவர் என்றார்.

அவரது இனவெறி நிரம்பிய இக்கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இதேபோல்இ மற்றுமொரு அமைச்சர் உலகக் கோப்பையைக் காண வரும் வெளிநாட்டு விசிறிகள் நோய்க் கிருமிகளைப் பரப்ப வாய்ப்பிருக்கிறது எனக் கூறியிருக்கிறார். இந்தக் கருத்தும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

ஆனால்இ இக்கருத்துகள் குறித்து ஃபிபா மற்றும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் ரஷ்ய ஒருங்கிணைப்புக் குழு ஆகியன மவுனம் கலைக்க மறுக்கின்றன.

(Visited 85 times, 1 visits today)