இன்று ரஷ்யாவில் ஆரம்பமாகவுள்ள உலகக்கிண்ண கால்பந்து போட்டியின் சில சுவாரசிய நிகழ்வுகள்

* ஒலிம்பிக் உள்பட பெரிய விளையாட்டுப் போட்டிகளை ரஷ்யா பலமுறை நடத்தியிருக்கிறது. உலகக் கோப்பை கால்பந்து போட்டி ரஷ்யாவில் நடைபெறுவது இதுவே முதன்முறை.

*ஐஸ்லாந்தும் பனாமாவும் முதன் முறையாக உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் அறிமுகமாகின்றன. கடைசியாக 2010-ல் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பையில் ஸ்லோவேக்கியா அறிமுக அணியாகக் களமிறங்கியது.

* போட்டியை நடத்தும் ரஷ்யா 1994, 2002, 2014 ஆகிய ஆண்டுகளில் சுற்றுப் போட்டிகளில் மட்டுமே விளையாடி போட்டியிலிருந்து வெளியேறியது. இந்த முறை எப்படியோ?

*2018 உலகக் கோப்பைச் சின்னமாக ‘ஷபிவாகா’ என்ற ஓநாயை இணையதளத் தேர்தல் மூலமே தேர்வு செய்தார்கள்.

*உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறும் இடங்களில் மாஸ்கோவுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. தொடக்கப் போட்டியும் இறுதிப் போட்டியும் இங்குள்ள லூசினிக்கி மைதானத்திலேயே நடைபெறுகின்றன.

*இந்த உலகக் கோப்பையில் முதன்முறையாக பங்கு பெறும் அரிய வாய்ப்பு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வேவுக்குக் கிடைத்தது. ஆனால், பயிற்சியாளருக்கு சம்பளம் முறையாகத் தரப்படாததால், ஃபிபா அமைப்பு ஜிம்பாப்வே அணியை வெளியேற்றிவிட்டது.

*போட்டியைக் காண வெளிநாடுகளிலிருந்து ரஷ்யா வருவோர், விசா இல்லாமலேயே வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டியைக் காண்பதற்கான டிக்கெட்டை ஆதாரமாகக் காட்டினால் போதுமாம்.

(Visited 25 times, 1 visits today)