காணமற்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவை அச்சுறுத்திய சம்பவத்தில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஞானசார தேரருக்கு ஆறு மாதகால  சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் 24ம திகதி ஞானசார தேரரை குற்றவாளியாக அறிவித்து ஹோமாகம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

2016 ஆண்டு ஜனவரி 25 ஆம் திகதி ஹோமாகம நீதவான் நீதிமன்ற வளாகத்தில் வைத்து சந்தியா எக்னெலிகொடவை அச்சுறுத்தியதாக ஞானசார தேரர் மீது குற்றம் சுமத்தப்பட்டு வழக்கு இடம்பெற்று வந்தது.

அதன்படி குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் ஹோமாகம பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஞானசார தேரர் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளார்.

(Visited 69 times, 1 visits today)