21-வது உலகக் கிண்ண கால்பந்து திருவிழா ரஷியாவில நாளை தொடங்குகிறது. 22-வது உலகக் கிண்ண கால்பந்து தொடர் கத்தாரில் 2022-ல் நடக்கிறது. இன்று ரஷியாவில் பிஃபா மாநாடு நடைபெற்றது. இதில் அங்கம் வகிக்கும் உறுப்பினர் நாடுகள் கலந்து கொண்டன. அப்போது 23-வது உலகக் கிண்ண நடைபெறும் இடத்தை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அதில் வடஅமெரிக்கா நாடானா அமெரிக்காஇ கனடா மற்றும் மெக்சிகோவில் போட்டியை நடத்துவற்கான போட்டியில் வெற்றி பெற்றது. அதன்படி 23-வது உலகக் கிண்ண கால்பந்து தொடர் மூன்று நாடுகளில் நடக்க இருக்கிறது. இந்த மூன்று நாடுகளும் உலகக் கிண்ண தொடருக்கான தகுதிச் சுற்றில் இந்த மூன்று அணிகளும் விளையாட வேண்டிய தேவையிருக்காது.

(Visited 23 times, 1 visits today)