சமீபத்தில் வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் காலா படம், இதுவரை இல்லாத அளவு உலக பாக்ஸ் ஆபீஸில் மோசமாக வசூல் செய்துள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில் பரபரப்பான எதிர்பார்ப்புக்கு மத்தியில் ‘காலா’ படம் உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களும் , நெகட்டிவ் விமர்சனங்களும் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் இந்த படம் உலக முழுதும் 1,800 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

காலை வாரிய காலா….
உலகம் முழுவதும் ‘காலா’ திரைப்படம் அதிக திரையரங்குகளில் வெளியாகி சாதனை படைத்தாலும் ரஜினிகாந்தின் முந்தைய படங்கள் செய்த வசூல் சாதனையை கூட காலா படம் தொடவில்லை.

கபாலி எவ்வளவோ பரவாயில்ல….
இந்நிலையில் வெளியான ஐந்து நாட்களில் காலா படம் உலக பாக்ஸ் ஆபீஸில் இதுவரை ரூ. 122.5 கோடி வசூல் செய்துள்ளது. ஆனால் ரஞ்சித், ரஜினி கூட்டணியில் முன்னதாக வெளியான கபாலி படம் கூட உலக பாக்ஸ் ஆபீஸில், முதல் ஐந்து நாட்களில் ரூ. 225 கோடி வசூல் செய்திருந்தது.

கைகொடுத்த தமிழ்நாடு:
இந்தியாவின் தென் மாநிலங்களில் இதுவரை காலா வெறும் ரூ. 73 கோடி தான் வசூல் செய்துள்ளது. அதில் பெரும்பாலான வசூல் (ரூ. 47.5 கோடி) தமிழகத்தில் தான் கிடைத்துள்ளது. தெலுங்கில் வெறும் ரூ. 5 கோடி தான் வசூலாகியுள்ளது. ஹிந்தியிலும் இதே நிலைதான். இந்தியாவில் மட்டும் வெளியான ஐந்து நாட்களி இதுவரை ரூ. 78 கோடி மொத்தமாக காலா படம் வசூல் செய்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் ரூ. 2.1 கோடி, அமெரிக்காவில் ரூ. 13 கோடி என சர்வதேச அளவில் மொத்தமாக ரூ. 44 கோடி காலா படம் வசூல் செய்துள்ளது.

போகப்போக மோசம்…..
இந்நிலையில் வரும் வாரங்களில் ரேஸ்-3 உள்ளிட்ட படங்கள் வெளியாகவுள்ளதால்  காலா வசூல் மேலும் காலைத்தான் வாரும் என தெரிகிறது.

(Visited 242 times, 1 visits today)