வேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட்ஃபோன் வர்த்தக நாமமான OPPO, F7 தர செயற்திட்டத்தை அறிமுகம் செய்திருந்தது.

இதனூடாக OPPO சாதனங்களை உற்பத்தி செய்யும் போது ஆய்வு, ஆபிவிருத்தி, கடுமையான தர கட்டுப்பாடு போன்றவற்றை மேற்கொள்ள தொடர்பாடல்களை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

OPPO லங்கா பிரதம நிறைவேற்று அதிகாரி பொப் லீ கருத்துத் தெரிவிக்கையில்,

“நவீன தொழில்நுட்பத்தை பிரதிபலிப்பது மற்றும் கையடக்க தொலைபேசித்துறையில் புதிய அறிமுகங்களை மேற்கொண்டிருந்த வர்த்தக நாமம் எனும் வகையில், எமது வாடிக்கையாளர்களுடன் நாம் பூரணமான சிறந்த பயணத்தை முன்னெடுக்க விரும்புகிறோம்.

இதனூடாக, எமது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பொருத்தமான கையடக்க தொலைபேசி வர்த்தக நாமத்தை கட்டியெழுப்பக்கூடியதாக இருக்கும். OPPO வழங்கும் தரம், தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் சேவைகள் போன்றன OPPO தொலைபேசி சிறந்தது என்பதை உணர்த்தியுள்ளன” என்றார்.

தொழில்நுட்பத்தில் உச்சத்தை எட்டிய வர்த்தக நாமம் எனும் கீர்த்தி நாமத்தை OPPO கொண்டுள்ளது.

புத்தாக்கத்தை பின்பற்றியிருந்ததனூடாக வர்த்தக நாமம் உயர்ந்த நிலையை எய்தியிருந்தது. முதலாவது அழகியல் அம்சங்களை கொண்ட தொலைபேசி, சுழலும் கமராவை கொண்ட தொலைபேசி, AI beautification உள்ளம்சத்தைக் கொண்ட தொலைபேசி மற்றும் 25MP selfie கமராவை கொண்ட தொலைபேசி வர்த்தக நாமமாக OPPO அமைந்துள்ளது.

குறிப்பாக, OPPO வின் F7 black diamond அலங்காரம் பிரத்தியேகமான வடிவமைப்பில் அமைந்துள்ளது. துறையில் அறிமுகம் செய்யப்பட்ட முதலாவது இவ்வகையான அலங்காரமாக அமைந்துள்ளது. 12 லேயர்கள் வடிவமைப்பு மற்றும் செரமிக் கட்டமைப்பை கொண்டுள்ளன. இந்த மாதிரியில் 2.5D plate, glass texture ஆகியன எளிமையான மற்றும் மிருதுவான உணர்வை வழங்கும் வகையில் அமைந்துள்ளன.

தொழில்நுட்ப மேம்படுத்தல்களை தொடர்ந்து முன்னெடுக்கும் வகையில், OPPO ஆய்வு நிலையத்தினால் Stanford பல்கலைக்கழகத்துடன் இணைந்து OPPO-Stanford ஒன்றிணைவு ஆய்வுகூடத்தை நிறுவியுள்ளது.

இதனூடாக நவீன AI தொழில்நுட்பங்கள் மற்றும் அப்ளிகேஷன்கள் பற்றிய ஆய்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன. மேலும், நியுயோர்க் பல்கலைக்கழகம், பீஜிங் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் தபால் மற்றும் தொலைத்தொடர்பாடல்களுக்கான பீஜிங் பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் OPPO கைகோர்த்து செயலாற்றுகிறது.

மொபைல் துறையில் முதல் தர நிறுவனங்களாக திகழும் Qualcomm, SONY,Dolby Laboratories & Sense Time  போன்றவற்றுடனும் கைகோர்த்து இயங்குகிறது.

தரப் பரிசோதனைகளின் பிரகாரம், விற்பனைக்காக அறிமுகம் செய்யப்படும் முன்னர், OPPO இனால் சுமார் ஆயிரக் கணக்கான தரப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஸ்மார்ட்ஃபோன் மதர்போர்ட்களில் 18 தரப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அத்துடன், ஒவ்வொரு சாதனமும் 10 நிமிடங்கள் வரை மழைப் பரிசோதனை மற்றும் குளிர் பரிசோதனை போன்றவற்றுக்கு உட்படுத்தப்படுகின்றன. 15 C0 வெப்பநிலையில் 7 தினங்கள் பேணப்படும். தொடர்ச்சியான ஈரப்பதன் பரிசோதனையும், 65 C0 வெப்பநிலை மற்றும் 95% ஈரப்பதனில் 7 தினங்களுக்கு பேணப்பட்டு பரிசோதிக்கப்படும்.

பாரியளவிலான உற்பத்தி செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு முன்னர், ஒவ்வொரு மாதிரி கையடக்க தொலைபேசியும், 130 பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படும். 10,000 கீழே விழுத்தல் பரிசோதனைகளுக்கும் உட்படுத்தப்படும் (மாபிள் மேற்பரப்பின் மீது தொலைபேசி விழச்செய்யப்படும்).

7 சென்ரிமீற்றர் உயரத்திலிருந்து சுமார் 20000 தடவைகள் வரை கீழே விழச்செய்யப்பட்டு பரிசோதிக்கப்படும். பொத்தான் பரிசோதனையின் போது, சுமார் 1 கிலோகிராம் விசையுடன், 100,000 தடவை அழுத்தப்படும். OPPO இனால் 1~2N.m டோர்க் விசை பரிசோதனை தொலைபேசியின் கீழிருந்து மேல் வரை பரிசோதிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதிரி தொலைபேசியும், USB  பொருத்துகைக்கும் USB வளைவு பரிசோதனைக்கும் உட்படுத்தப்படும், இதனூடாக USB போர்ட்களின் நீடித்த உழைப்பு மற்றும் கடுமையான தன்மை போன்றன உறுதி செய்யப்படுகின்றன.

இந்த தரக்கட்டுப்பாட்டு கட்டமைப்புகள் மற்றும் செயன்முறைகளினூடாக, உயர் தரம் வாய்ந்த சாதனங்கள், துறையின் சராசரியை 99.8 சதவீத பெறுமதியை விட உயர்ந்த சாதனங்களை வழங்க ஏதுவாக அமைந்துள்ளன.

தேவையேற்படின், 7 தினங்களுக்கு மாற்று தொலைபேசி வழங்கும் சேவையை OPPO வழங்குகிறது. நவீன வசதிகள் படைத்த OPPO சேவை நிலையங்கள் கொழும்பு, காலி, கண்டி, மட்டக்களப்பு ஆகிய நகரங்களில் அமைந்துள்ளன. இவற்றினூடாக 90 சதவீதமான வேளைகளில், இரண்டு மணித்தியாலங்களில் பழுதுபார்ப்புகள் பூர்த்தி செய்யப்படுகின்றன.

(Visited 30 times, 1 visits today)