வாட்ஸ்-அப் செயலியின் புதிய அப்டேட்டில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள் குறித்து காணலாம்.

வாட்ஸ்-அப் செயலி ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு பீட்டா வெர்ஷன்(Android Beta Version) 2.18.179 என்ற பெயரில் வந்துள்ளது.

இந்த அப்டேட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சம்  சாதாரண மெசேஜ்(Normal Message) மற்றும் ஃபார்வேர்ட் மெசேஜ்(Forward Message) இடையே வேறுபாட்டை காண்பிக்கிறது. அதாவது ஒரு மெசேஜ் ஃபார்வேர்ட் செய்யப்பட்டிருந்தால்  அதன் அருகே ‘‘forwarded’ ‘ என்ற லேபிள் இடப்பட்டிருக்கும்.

இந்த ‘forwarded’  லேபிள் மெசேஜ் அனுப்பியவருக்கும்  அதைப் பெற்றவருக்கும் தெரியும். இந்த அப்டேட் ஆண்ட்ராய்டில் வாட்ஸ்-அப் பீட்டா வெர்ஷனை பயன்படுத்துவோருக்கும் மட்டும் வெளியாகியுள்ளது.

விரைவில் நிலையான அப்டேட்டை ஆண்ட்ராய்டு(Android), ஐஓஎஸ்iOS)இ விண்டோஸ்(Windows) ஓஎஸ்களில் கொண்டுவரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ‘forwarded’ லேபிளை பார்ப்பதற்கு  சாட் ஹிஸ்டரியில்(Chat History) குறிப்பிட்ட மெசேஜை தொடர்ந்து அழுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

இதன்மூலம் சம்பந்தப்பட்ட மெசேஜ்இ உங்களுடையதா? அல்லது அனுப்பியவருடையதா? என்று தெரிந்து கொள்ளலாம். இந்த புதிய அப்டேட் குறிப்பிட்ட நபருக்கு மெசேஜ் ஃபார்வேர்ட் செய்யும் போதுஇ எந்தவித பிரச்சனையும் ஏற்படக்கூடாது என்பதற்காக செய்யப்பட்டுள்ளது.

கடந்த மாதம் வாட்ஸ்-அப் வெளியிட்ட அப்டேட் மூலம், வாய்ஸ் மெசேஜை(Voice Message) ‘லாக்டு ரெக்கார்டிங்’(Locked Recording) செய்து அனுப்ப இயலும். இதன்மூலம் வாய்ஸ் ரெக்கார்டிங் செய்யும் போது  ரெக்கார்டிங் பட்டனை தொடர்ந்து அழுத்திக் கொண்டே இருக்க வேண்டியதில்லை.

(Visited 50 times, 1 visits today)