Kotiyak Vatina Adahasak சீசன் 2இறுதிப்போட்டி எதிர்வரும் 15ஆம் திகதி ஜுன் மாதம் 2018 ஆம் ஆண்டு 9 மணிக்கு சிரச TV யில் ஒளிப்பரப்பாகவுள்ளது. இலங்கையின் முதலாவது கண்டுபிடிப்பு மற்றும் தொழில்முனைவோர் அடிப்படையிலான தொழில்நுட்ப ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியான, Kotiyak Vatina
Adahasak, புதிய தலைமுறையினரின் கற்பனை திறனை உலகிற்கு பதிவு செய்யும் விதமாக மொபிடெல் உருவாக்கிய இந்த நிகழ்ச்சி சிரச TV யால் தயாரிக்கப்பட்டது.

நிஜ வாழ்க்கையில் சவால்களை தொழில்நுட்ப ரீதியாக எதிர்கொள்வதன் மூலம் புத்தாக்க சிந்தனையாளர்களை உருவாக்குவதே இந்த நிகழ்வின் நோக்கமாகும். கண்டுபிடிப்புக்களை நோக்கமாக கொண்டு மொபிடெலினால் உருவாக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியானது தொழில் முனைவோருக்கு ஒரு சிறந்த தளத்தை வழங்குகின்றது.

Kotiyak Vatina Adahasak சீசன் 2 இறுதிப்போட்டியில் நான்கு போட்டியாளர்களின் புத்தாக்க சிந்தனையை நடுவர்கள் பரிசிலித்து தீர்ப்பளிக்கவுள்ளனர். இறுதிப்போட்டியாளர்களில் சச்சிந்திர டீ சில்வா, நீடித்த கழிவு மேலாண்மை மற்றும் மீள் சுழற்சி தொழில்நுட்பத்தினை முன்னெடுப்பதற்காக கழிவு மேலாண்மை அமைப்பினை பற்றிய திட்டத்தை உருவாக்கியுள்ளார்.

இரண்டாவது போட்டியாளர், ஷசிகா முனசிங்க கண் நோய் ஸ்க்ரீனிங் அமைப்பினை உருவாக்கி பார்வைக் குறைப்பாட்டை கண்டுபிடிக்கும் திட்டத்தை உருவாக்கியுள்ளார். அடுத்த போட்டியாளர் அருணா ஜயசேன உலகத்திலேயே முதன்முதலாக UAV களின் விமான நேரத்தை அதிகரிக்க புதுமையான முறையை உருவாக்கியுள்ளார். இறுதியாக சமிந்த கண்டம்பி, உலகம் முழுவதற்குமாக மாணவர்களுக்கு வருகை நேரத்தை குறிக்க, பணத்தை மாற்றுவதற்கு, பஸ் கட்டணம் செலுத்த ,ATM அட்டையாக பயன்படுத்த என்று ஒரு அட்டையில் பல பயன்பாட்டினை கொண்டதாக உருவாக்கியுள்ளார்.

ஒவ்வொருவரது புத்தாக்க சிந்தனைகளும் மிகச் சிறப்பானதாக இருப்பதால் யார் வெற்றிபெறுவார்கள் என்ற எதிர்ப்பார்ப்புடன் இறுதிப்போட்டியை அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்

இந்த புத்தாக்க சிந்தனைகளை முதலீட்டாளர்களுக்கு pitch செய்வதன் மூலம் ரூ. 330 மில்லியன் பெற்றுக்கொள்ள முடியும். pitch செயன்முறையானது R & D மற்றும் தொழில் நுட்பத்தில் கவனம் செலுத்துவதை போல சந்தைப்படுத்தல் மற்றும் முன்வைத்தல் திறனை தொழில் முனைவோர்களுக்கு வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

சிந்தனைகளை மெருகேற்றி மதிப்பளிக்கும் நிபுணர்களினால் போட்டியாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் நளின் கருணசிங்க , மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் விஷாகா நாணயக்கார, ICT Agency Sri Lanka வின் சிரேஷ்ட ஆலோசகர் இண்டிகா டீ சொய்சா , Pick Me இணை நிறுவனர் ஃபாத்தி மொஹமட் Strategic Enterprises
Management Agency Sri Lanka நிறுவனத்தின் சிரேஷ்ட ஆலோசகர் அர்ஜுன செனவிரத்ன கண்டுபிடிப்பாளர் ஃசிரேஷ்ட ஆய்வு விஞ்ஞானி மஞ்சு குனவர்த்தன ஆகியோர் நிபுணர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்

மொபிடெல் நிறுவன பொது முகாமையாளர் பிரபாத் கமகே கூறுகையில்

‘ இலங்கையில் சமிப காலமாக பொது பிரச்சினைகளுக்கு புத்திசாலித்தனமான தொழில் நுட்ப கண்டுபிடிப்புக்கள் மற்றும் தீர்வுகளை வழங்கும் வேகம் அதிகரித்துள்ளது. துரதிர்ஷ்டவசமாக இத்தகைய திறமையான நபர்களுக்கு நிதி உதவிகள் கிடைக்காமையால் தங்களது தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்களையும் புத்தாக்க சிந்தனைகளையும் நிறைவேற்ற முடியாது தமது கனவுகளை கைவிடுகின்றனர்.

இத்தகைய திறமையான தொழில் முனைவோர்களின் கனவுகளை நிறைவேற்ற மொபிடெல் எடுத்த நடவடிக்கையே Kotiyak Vatina Adahasak நிகழ்ச்சி. மொபிடெல், சிரச TV யுடன் இணைந்து இந்த ரியாலிட்டி நிகழ்ச்சியாக மேற்கொள்வதன் மூலம் ஆசியாவிலேயே இத்தகைய செயற்திட்டத்தை முன்னெடுத்த நிறுவனமாக மாறியுள்ளது. இதனை போல இன்னும் பல்லாயிரக்கணக்கான தொழில் முனைவர்களையும் தொழில் நுட்பத்தையும் வளர்க்க மொபிடெலின் புதுமையான முயற்சிகள் தொடரும்.’

Kotiyak Vatina Adahas எந்தவொரு நாட்டை சேர்ந்த கண்டுபிடிப்பாளருக்கும் தங்கள் சிந்தனைகளை சமர்பித்து பங்கேற்க முடியும். நூற்றுக்கணக்கான விண்ணப்பங்களில் இருந்து பத்து விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பல கட்டங்களை கடந்து அவர்களில் நான்கு பேர் மகுடத்திற்காக இறுதிப் போட்டியில் கலந்துகொள்ளவுள்ளனர்.

(Visited 19 times, 1 visits today)