தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் இலங்கையின் பயணிகள் போக்குவரத்து துறையில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தி இலங்கையின் பெருமையாகவும் தொழில்நுட்ப தொழில்முயற்சி துறையில் உச்ச ஊக்குவிப்புடன் கூடிய நிறுவனமாகவும் தடம் பதித்துள்ள Pick Me, இலங்கையின் மிக அதிக வாடகை வாகனங்களையும் மிக அதிக எண்ணிக்கையிலான பயணிகளையும் ஒருங்கிணைக்கின்ற தொழில்நுட்ப மேடையாக விளங்குகிறது.

முச்சக்கர வண்டிகள், மினி கார்கள், செடன் கார்கள், வேன்கள் மற்றும் Pick Me VIP என்று அழைக்கப்படுகின்ற அதி சொகுசு வாகனங்கள் உள்ளிட்ட சுமார் 12,000 வாடகை வாகனங்களுக்கு மேற்பட்ட வாகனங்களை கொண்டு கொழும்பு, களுத்துறை, கண்டி மற்றும் கம்பஹா ஆகிய 04 மாவட்டங்களைச் சேர்ந்த ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட பயணிகளுக்கு போக்குவரத்து தேவைகளை நிறைவேற்றுகின்ற நம்பிக்கை மிக்க வர்த்தக நாமமாக Pick Me மாறியுள்ளது.

இந்த நம்பிக்கையுடன் இலங்கை தயாரிப்பான Pick Me இலங்கை வாழ் சகல வாடிக்கையாளர்களுக்கும் பயன்படுத்தக்கூடிய வகையில் தமது சேவைகளை விரிவுப்படுத்தும் பயணத்தின் திருப்புமுனையாக Pick Me மென்பொருளை தாய்மொழிக்கு மாற்றியதை குறிப்பிடலாம்.

அதன் பிரகாரம், Pick Me நிறுவனம் தமது வாடிக்கையாளர்களுக்கு தமது தாய்மொழிகளில் அதாவது சிங்களம் மற்றும் தமிழ் மொழியில் Pick Me செயலியை (App) பயன்படுத்தும் வாய்ப்பினை வழங்கியுள்ளது. எந்தவொரு ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசியையும் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஆங்கில மொழிக்கு மேலதிகமாக தமது விருப்பம் போல சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளிலும் Pick Me செயலியை பயன்படுத்தி வாடகை வாகனங்களை பெற்றுக் கொள்ள முடியும். வாடகை வாகனத் துறையில் காணப்படுகின்ற இதர போட்டி நிறுவனங்களுடன் ஒப்பிடுமிடத்து Pick Me (App) பயன்படுத்துவது மிகவும் வசதியாகவும் இலகுவாகவும் உள்ளதென்பது வாடகை வாகன வாடிக்கையாளர்கள் அனைவரும் பொதுவாக ஏற்றுக்கொள்ளும் உண்மை ஆகும்.

(Visited 210 times, 1 visits today)