தனுசும்  சமுத்திரக்கனியும் கலந்துகொண்ட திரைப்பட விழா ஒன்றில், ‘ ரஜினியுடன் நடிக்கும் சமுத்திரக்கனியைப் பார்த்தால் எனக்குப் பொறாமையாக இருக்கிறது. ‘காலா’வில் எந்த வேடம் கொடுத்தாலும் நான் நடிக்கிறதுக்குத் தயாராக இருக்கிறேன்’ என்று பகிரங்கமாக தனது விருப்பத்தை வெளியிட்டவர் தனுஷ். ஆனால் தனுஷ் ஆசையை இயக்குநர் பா.ரஞ்சித் ஏனோ நிறைவேற்றவில்லை.

‘காலா’வில் ரஜினிக்கு மூன்று மகன்கள். ஏதாவது ஒரு மகன் வேடத்தில் நடிப்பதற்கு நிச்சயமாய் தன்னை ரஞ்சித் அழைப்பார் என்று நம்பிக்கையோடு காத்துக்கொண்டிருந்தார் தனுஷ். தனுஷை நடிக்கவைக்கும் முன் ரஜினியிடம் சம்மதம் வாங்கிக்கொள்வது நல்லது என்று தனுஷ் நடிக்க விருப்பம் தெரிவித்திருக்கும் வி‌ஷயத்தை ரஜினியிடம் சொல்லியிருக்கிறார் ரஞ்சித்.

நீண்டநேரம் யோசித்த ரஜினி, தனுஷ் தயாரிப்பாளராக மட்டும் இருக்கட்டும். நடிக்க வேண்டாமே!’ என்று தவிர்த்துவிட்டாராம். தனுசுடன் ரஜினி ஏன் நடிக்க மறுத்தார் என்று காரணம் தெரியவில்லை.

(Visited 44 times, 1 visits today)