முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலை மாவட்டத்தில் நாளை மாலை 5.30 மணிக்கு சிவன் கோயிலடியில் இடம்பெறவுள்ளது.

தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்டக்கிளையினால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்டக்கிளையின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண கல்வி அமைச்சருமான சி.தண்டாயுதபாணி தெரிவித்தார்.

இந்நிகழ்வில் எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் , பாராளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளுராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

(Visited 49 times, 1 visits today)