பெரிய பலன் தரும் சின்ன வெங்காயம்
2016-01-20 13:36:08 | General

தினமும் சாப்பிட வேண்டிய காய்கறிகளில் சின்ன வெங்காயத்துக்குத் தான் முதல் இடம். ஆனால் உரிக்க சோம்பல் பட்டு பலரும் பெரிய வெங்காயத்தையே நாடுகின்றனர்.


உணவில் ருசியைக் கூட்டி வாசனையைச் சேர்க்கும் சின்ன வெங்காயம் அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது. சின்ன வெங்காயத்தை 15 நாட்களுக்கு ஒரு முறை நெய் அல்லது எண்ணெயில் வதக்கி உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் என்றும் இளமையுடன் இருக்கலாம்.


உடல் சூட்டைக் குறைக்க வல்லது வெங்காயம். பழைய சோற்றில் மோர் விட்டு நான்கு சின்ன வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சாப்பிடலாம். உடலின் வெப்பம் தணியும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இரத்த ஓட்டத்தைச் சீராக்கும்.


கணையத்திற்கு உள்ளே இருக்கும் செதிலில் பசை அல்லது அழுக்கு .சூழ்ந்திருந்தால் இன்சுலின் சுரக்காது. இதனை இயல்பான நிலைக்கு மாற்றி குளுக்கோஸின் அளவைக் கட்டுக்குள் வைக்க சின்ன வெங்காயம் உதவுகிறது.


கல்லீரலில் இருக்கும் பித்தத் திரவம் அதிகமாக சுரந்தால் காமாலை வரும். இந்தப் பித்தத் திரவத்தை இயல்பான நிலையில் சுரக்க வைப்பது சின்ன வெங்காயம்.


வயிற்றுப் புண், வெள்ளை படுதல், கண் நோய் போன்ற பாதிப்பிலிருந்து விடுபட தினமும் உணவில் சின்ன வெங்காயம் சேர்ப்பது அவசியம்.


வடகம் கெட்டு விடாமல் பதப்படுத்திப் பாதுகாக்க சின்ன வெங்காயம் சேர்த்துத் தயாரித்தால் போதும்.

அம்மை நோய் வராமல் தடுக்கவும் வந்தால் சீக்கிரம் குணமாகவும் சின்ன வெங்காயம் உதவுகிறது. ஆண் பிள்ளைகளுக்கு அம்மை வந்தால் அதன் பிறகு இனப் பெருக்க மண்டலம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

இதனைத் தடுக்க அம்மை ஏற்பட்ட நாளிலிருந்து மூன்று மாதங்கள் சின்ன வெங்காயத்தை உணவில் சேர்த்து வந்தால் பாதிப்பிலிருந்து தப்ப முடியும். 

comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
e2pjj
  PLEASE ENTER CAPTA VALUE.