வரலாற்றுப் புகழ்மிக்க நல்லூர்க் கந்தன் வருடாந்த உற்சவம் நேற்று (19-08-2015) ஆரம்பமானது. அடியார்கள் பக்திபூர்வமாக அங்கப்பிரதட்சணம் செய்வதை இங்கு காணலாம்.
செல்வா நற்பணி மன்றத்தினர், விவேகானந்தாசபை முன்னாள் செயலாளர் இராஜபுவனீஸ்வரனின் நினைவு தினத்தை விவேகானந்தா கல்லூரி மண்டபத்தில் நடத்திய போது சிறப்பு அதிதி விவேகானந்தா சபை செயலாளர் விவேகானந்தன் உருவப்படத்திற்கு மாலை அணிவிப்பதையும் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டவர்களையும் இங்கு காணலாம். *** படப்பிடிப்பு: எஸ்.வரதராஜன்
ஓமந்தை அரசர்பதி ஸ்ரீ கண்ணகை அம்மன் பொற்கோயில் வருடாந்த பொங்கல் விழாவின் போது உற்சவமூர்த்தி உள்வீதி உலா வருவதனையும் ஆலய தர்மகர்த்தா சபை உறுப்பினர்களுக்கு ஆலய குரு பிரசாதம் வழங்குவதனையும் கலந்து கொண்ட பக்தர்களையும் இங்கு காணலாம். *** படப்பிடிப்பு: எஸ்.ராமதாஸ்
தமிழர் முற்போக்கு முன்னணியின் உப தலைவரும் முன்னாள் ஊவா மாகாண சபை உறுப்பினருமான அ.அரவிந்குமார் தமது வேட்புமனுவை பதுளை தெரிவு அத்தாட்சி அலுவலர் நிமல் ஆபேசிறியிடம் சமர்பித்துவிட்டு திரும்பும்பொழுது அவரை ஆதரவாளர்கள் மலர்மாலைகள் அணிவித்து பொன்னாடைகள் போர்த்தி வரவேற்பதை இங்கு காணலாம். *** படம்: பசறை நிருபர்
மலையக கல்வி அபிவிருத்தி மன்றம் ஒன்பதாவது வருடமாக ஏற்பாடு செய்த ருக்மணி அம்மா ஞாபகார்த்தக் கிண்ண, அணிக்கு 5 ஓவர் மென்பந்து கிரிக்கெட் போட்டி கொழும்பு பி. சரவணமுத்து விளையாட்டரங்கில் நடைபெற்றது. நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட கிரிக்கெட் ஜாம்பவான் முத்தையா முரளிதரனை மன்ற தலைவர் கே.சிவசுப்பிரமணியம் ஜே.பி., செயலாளர் ஏ.பாஸ்கரன் மற்றும் விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் மு.சிவக்குமார் ஆகியோர் கௌரவிப்பதையும் முதலாம், இரண்டாம் இடங்களைப் பெற்ற அணிகளுக்கு வெற்றிக் கிண்ணங்கள் வழங்குவதையும் வெற்றி பெற்ற அணி பிரதம அதிதிகளுடனிருப்பதையும் இங்கு காணலாம்.
வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டு விழா நேற்று வியாழக்கிழமை வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியில் ஆரம்பமானது. பிரதம விருந்தினர்கள் வரவேற்கப்படுவதையும் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்படுவதையும் இங்கு காணலாம். *** படம்: வவுனியா நிருபர்
கண்டி போகம்பறை மைதானத்தில் எதிர்வரும் 10 ஆம் திகதி பிற்பகல் இடம்பெறவுள்ள மத்திய மாகாண பாடசாலைகளுக்கான விளையாட்டுப் போட்டிக்கான ஒலிம்பிக் தீபம் தெல்தெனிய கல்வி வலயத்திலுள்ள ஹஸலக மகா வித்தியாலயத்திலிருந்து ஆம்பமாகி கண்டி வரை வீரர்களால் கொண்டுவரப்படவுள்ளது. வத்துகாமம் நிருபர்
பண்டாரவளை சேர் ராசிக் பரீத் மகா வித்தியாலயத்தை விஞ்ஞானக் கல்லூரியாக தர முயர்த்தும் வைபவத்துக்கு பிரதம அதிதிகளாக வருகைதந்த ஊவா மாகாண முதலமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ, மாகாண அமைச்சர் வடிவேல் சுரேஷ் ஆகியோரை அதிபர் எம்.என்.எம். நௌஷாட் வரவேற்று அழைத்துச் செல்வதையும், அதிபர் மற்றும் பிரமுகர் உரையாற்றுவதையும் கலந்துகொண்டோரையும் காணலாம். படம்: பண்டாரவளை நிருபர்
கொழும்பு ஜெயந்திநகர் ஜிந்துப்பிட்டி ஸ்ரீசிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் குருபெயர்ச்சியை முன்னிட்டு ஸ்ரீ தட்சணா மூர்த்திக்கு ஹோமம், ஸ்நபனாபிஷேகம் இடம்பெறுவதையும் கலந்து கொண்ட பக்தர்களையும் இங்கு காணலாம். படப்பிடிப்பு:எஸ்.வரதராஜன்
எருவில் ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கின் முக்கிய நிகழ்வான தீமிதிக்கும் நிகழ்வு ஆலயமுன்பாக நடைபெற்றபோது நேர்த்தி வைத்த அடியார்கள் தீமிதிப்பு நிகழ்வில் கலந்து கொண்டிருப்பதனையும் படத்தில் காணலாம்.
1989ம் ஆண்டு மே மாதம் பத்தாம் திகதி யாழ்நகரில் கொலை செய்யப்பட்ட யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரியின் பல்கலைக்கழக புகுமுக வகுப்பு மாணவன் அகிலன் திருச்செல்வத்தின் 25வது ஆண்டு நினைவு நிகழ்வு கடந்த 7ம் திகதி கனடாவின் ரொறன்ரோவில் நடைபெற்றபோது எடுக்கப்பட்ட படங்கள்
புத்தளம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்று விளங்கும் உடப்பு ஸ்ரீ ருக்மணி சத்தியபாமா சமேத ஸ்ரீ பாரத்தசாரதி ஸ்ரீ திரௌபதியம்மன் ஆலயத்தின் வருடாந்த ஆடி விழா மகோற்சவத்தில் இடம்பெற்ற தீ மிதிப்பு வைபவம்....
யாழ்ப்பாணம் நல்லூர் முருகன் ஆலய கொடியேற்ற நிகழ்வு
தினக்குரல்-வடலி சிறுகதைப் போட்டியின் பரிசளிப்பு விழா கிளிக்ஸ்
வடமாகாண சபைத் தேர்தல் வாக்களிப்பு